குறைந்த செலவில் தரமான கட்டுமானம்: வீடுகள் கட்ட ஐஐடி-யின் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்; 500 சதுர அடி வீட்டை ரூ.7 லட்சத்தில் கட்ட முடியும்

By டி.செல்வகுமார்

குறைந்த விலையில் தரமான வீடுகள் கட்டுவதற்கான சென்னை ஐஐடி-யின் ஜிஎப்ஆர்ஜி என்ற புதிய தொழில்நுட்பம், கட்டுமானத் துறையில் பிரபலமடைய தொடங்கியுள்ளது. 500 சதுர அடி வீட்டை ரூ.7 லட்சத்தில் கட்ட முடியும். புறநகர்களில் வசிக்கும் நடுத்தர மக்களுக்கு வரப்பிரசாதமாகக் கிடைத்துள்ளது இந்த புதிய தொழில்நுட்பம்.

இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக வீடுகளுக் கான தேவை நாளுக்குநாள் அதிகரிக்கிறது. ஆனால், மணல், சிமென்ட், கம்பி போன்றவற்றின் விலை உயர்ந்துகொண்டே செல்வதால், கட்டுமானச் செலவும் விண்ணை முட்டுகிறது. அதனால், ‘சொந்த வீடு’ என்பது இன்னமும் ஏராளமானோருக்கு கனவாகத்தான் இருக்கிறது. நிதி நெருக்கடியால் அனைவருக்கும் வீடுகள் கட்டித்தர அரசால் முடியவில்லை.

இந்நிலையில், குறைந்த விலை யில் தரமான வீடுகள் கட்டுவதற்கான புதிய தொழில் நுட்பத்தைக் கண்டறி யும் முயற்சியில் இறங்கியது சென்னை ஐஐடி (இந்திய தொழில் நுட்ப நிறுவனம்). இதன் சிவில் என்ஜினீயரிங் துறையின் ஒரு பிரிவான ஸ்ட்ரக்சுரல் என்ஜினீயரிங் பேராசிரியர்களும், ஆராய்ச்சி மாண வர்களும் அதற்கான ஆய்வை 2003-ம் ஆண்டு தொடங்கினர்.

ஆஸ்திரேலிய தொழில்நுட்ப அடிப்படையில் ஜிஎப்ஆர்ஜி (Glass Fibre Reinforced Gypsum) என்ற புதிய தொழில் நுட்பத்தை 2013-ம் ஆண்டு கண்டுபிடித்தனர். இப்புதிய தொழில் நுட்பத்தைக் கொண்டு சென்னை ஐஐடி வளாகத்தில் மாதிரி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. அங்கு பேராசிரி யர்கள் சிலர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். வார்தா உள்ளிட்ட இரண்டு புயல்களையும், 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத் தையும் எதிர்கொண்டு வலுவாக இருக்கிறது அக்குடியிருப்பு.

இதுகுறித்து சென்னை ஐஐடி ஸ்ட்ரக்சுரல் என்ஜினீயரிங் பிரிவு பேராசிரியர்கள் தேவதாஸ் மேனன், மெஹர் பிரசாத் ஆகியோர் கூறிய தாவது:

‘‘குறைந்த விலையில் தரமான வீடுகள் கட்டுவதற்காக சென்னை ஐஐடி கண்டுபிடித்துள்ள ஜிஎப் ஆர்ஜி (Glass Fibre Reinforced Gypsum) எனப்படும் புதிய தொழில் நுட்பத்தின் முக்கிய மூலப்பொருள் ஜிப்சம் ஆகும். இந்தியாவில் தற்போது 65 மில்லியன் டன் ஜிப்சம் இருப்பு உள்ளது. ஜிப்சத்துடன் மணல், சிமென்ட், கம்பியைக் கொண்டு மெல்லிய சுவர் தொழிற் சாலையில் உருவாக்கப்படுகிறது. பின்னர் அவற்றை எடுத்து வந்து நேர்த்தியாக வீடுகள், குடியிருப்பு கள் கட்டப்படுகின்றன.

வீடுகள் உத்தரம், தூண்கள் இல்லாமல் கட்டப்படுவதால், வீட்டின் உட்பகுதி அளவு, அதிகமாகக் கிடைக்கும். சாதாரணமாகக் கட்டப்படும் வீட்டு சுவரின் தடிமன் 9 அங்குலமாக இருக்கும். ஆனால், எங்களது தொழில்நுட்பத்தில் கட்டப்படும் சுவரின் தடிமன் 5 அங்குலம்தான்.

சாதாரணமாக வீடு கட்டும்போது ஒரு சதுரஅடிக்கு ரூ.2,000 வரை செலவாகும். புதிய தொழில்நுட்பத் தில் கட்டும்போது ஒரு சதுர அடிக்கு ரூ.1,250 முதல் ரூ.1,500 வரை மட்டுமே ஆகும். மணல், சிமென்ட், கம்பியின் பயன்பாடு குறைவு என்பதால் கட்டுமானச் செலவு 20 சதவீதம் குறையும். 500 சதுர அடி கொண்ட ஒரு வீட்டை ரூ.7 லட்சத்தில் கட்ட முடியும்.

சாதாரணமாக ஒரு வீடு கட்டுவதற்கு 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரை ஆகும். ஆனால், ஜிஎப்ஆர்ஜி தொழில்நுட்பத்தில் ஒரே மாதத்தில் கட்டி முடிக்கலாம். வீடுகளின் ஆயுட்காலம் 70 ஆண்டுகள். நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களால் சிறிதும் பாதிக்காது. அந்தளவுக்கு வலுவாக வும், தரமாகவும் இருக்கும்.

சென்னை ஐஐடியில் ஒரு குடியிருப்பும், ஆந்திரா ஐஐடியில் நான்கு மாடிகளுடன் 5 விடுதிகளும் கட்டியுள்ளோம். பெங்களூருவில் நிறைய தனி வீடுகள் கட்டப் பட்டுள்ளன. ஆந்திர மாநிலம், நெல் லூரில் 36 வீடுகள் கட்டியிருக் கிறார்கள். தென்னிந்தியாவில் மொத்தம் 1,000 வீடுகள் புதிய தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள் ளன. இப்புதிய தொழில்நுட்பம் தற்போது பிரபலமடையத் தொடங்கியுள்ளது.

கிரெடாய், இந்திய பில்டர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் எங்களது வடிவமைப்பு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக பெரு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரளாவில் உடனடியாக வீடுகள் கட்டித் தருவதற்கு எங்களது தொழில்நுட்பத்துக்கு முன்னுரிமை அளித்துள்ளனர்.

12,000 பேருக்கு வீடுகள் தேவைப்படும் நிலையில், உடனடியாக 1,500 வீடுகள் கட்டுவதற்கு பயனாளிகளுக்கு தலா ரூ. 5 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 500 வீடுகள் ஜிஎப்ஆர்ஜி தொழில் நுட்பத்தில் கட்டப்படவுள்ளன. மீதமுள்ளவர்கள் விரும்பினால் இலவசமாக எங்கள் தொழில்நுட்ப வடிவமைப்பு வழங்கப்படும். கேரளாவில் இடுக்கி மாவட்டம், ஆனைச்சால் கிராமத்தில் பெரு வெள்ளத்தின்போது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய வீடு ஜிஎப் ஆர்ஜி தொழில்நுட்பத்தில் கட்டப் பட்டிருந்ததால் சேதமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்