ஹைதராபாத்தில் நேற்று 16 கி.மீ தொலைவுக்கு பயணிக்கும் புதிய மெட்ரோ ரயில் தடத்தை ஆளுநர் நரசிம்மன் தொடங்கி வைத்தார். இது நாட்டிலேயே 2-வது நீளமான மெட்ரோ ரயில் திட்டமாகும்.
ஹைதராபாத்தில் 3 கட்டங்களாக ஹைதராபாத்-மியாப்பூர் இடையே மொத்தம் 72 கி.மீ தொலைவிற்கு மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28-ம் தேதி, ஹைதராபாத்தின் முதல் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இது நாகோல்-மியாப்பூர் இடையே 30 கி.மீ தொலைவைக் கொண்டதாகும்.
தற்போது 2-ம் கட்டமாக அமீர்பேட்-எல்.பி நகர் இடையே 16 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இதனை ஆந்திரா - தெலங்கானா மாநில ஆளுநர் நரசிம்மன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ராமாராவ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். தற்போது ஹைதராபாத்தில் மொத்தம் 46 கி.மீ தொலைவிற்கு மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஹைதராபாத் நகரம், நாட்டிலேயே 2-வது அதிக தூரம் பயணிக்கும் மெட்ரோ ரயில் திட்டம் அமைந்த நகரமாக இடம் பிடித்துள்ளது. நாட்டிலேயே அதிக அளவாக டெல்லியில் மட்டுமே மொத்தம் 252 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவே நாட்டின் அதிக தூரம் கொண்ட மெட்ரோ பாதையாகும். அதற்கு அடுத்தபடியாக தற்போது ஹைதராபாத்தில் மொத்தம் 46 கி.மீ தொலைவிற்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 3-வது இடம் சென்னைக்கு கிடைத்துள்ளது.
சென்னையில் மொத்தம் 35.3 கி.மீ தொலைவுக்கு தற்போது மெட்ரோ ரயில் திட்டம் அமலில் உள்ளது.நாட்டிலேயே அதிக அளவாக டெல்லியில் மட்டுமே மொத்தம் 252 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவே நாட்டின் அதிக தூரம் கொண்ட மெட்ரோ பாதையாகும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago