கேன்கள், பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் தரத்தை பொதுமக்களே நேரடியாக அறிந்துகொள்ள தொடங்கப்பட்டுள்ள இணையதளத்தில் தமிழகத்தில் இதுவரை 1,016 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.
தமிழகத்தில் குடிநீர் கேன்கள் விற்பனை மிகப்பெரிய வர்த்தகமாக மாறியுள்ளது. பெரும்பாலான குடிநீர் நிறுவனங்கள் நிலத்தடி நீரைத்தான் முக்கிய நீர் ஆதாரமாக கொண்டுள்ளன. அளவுக்கு அதிகமான காப்பர், இரும்பு, அலுமினியம், குளோரைடு போன்றவற்றால் தரம் பாதிக்கப்பட்ட குடி நீரைப் பருகினால், வாந்தி, உயர் ரத்த அழுத்தம், முடக்குவாதம், இதயம், கிட்னி, எலும்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும். எனினும், லாபம் ஒன்றையே நோக்கமாக கொண்டு செயல்படும் சிலர், குடிநீரின் தரத்தைப் பற்றி கவலைப்படாமல் மக்களின் தேவையை பயன்படுத்தி காசு பார்க்கின்ற னர். பல இடங்களில் முறையான உரிமம் பெறாமல் தரமற்ற குடிநீர் கேன்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் நுகர்வோரிடையே நம்பிக்கையையும், வெளிப்படைத்தன்மை யும் ஏற்படுத்தும் வகையில், குடிநீரின் தரத்தை பொதுமக்கள் நேரடியாக தெரிந்து கொள்ளும் வகையில் இந்திய உணவு பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) சார்பில் www.safewater. fssai.gov.in என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணைய தளத்தில் குடிநீர் பாட்டில்கள், பாக்கெட்டுகள், 20 லிட்டர் கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்யும் நிறுவனங்கள் தங்கள் நிறுவனம் குறித்த விவரங்களைப் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இதுதொடர்பாக மாநில உணவு பாதுகாப்புத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் மட்டும் உணவு பாதுகாப்பு உரிமம் (FSSAI Licence) பெற்ற 1,319 கேன் குடிநீர் நிறுவனங்கள் உள்ளன. அவற்றில், ஜூலை மாதம் வரை மொத்தம் 1,016 நிறுவனங்கள் இணையதளத்தில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்துள்ளன. எஞ்சியுள்ள நிறவனங்களும் பதிவு செய்ய இந்திய உணவு பாதுகாப்புத் துறை ஆணை யம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, அனைத்து மாவட்டங்களில் உள்ள உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் குடிநீர் நிறுவன உரிமையாளர்களிடம் இணையதளத் தில் பதிவு செய்வதன் அவசியத்தை எடுத்துரைத்து வருகின்றனர்.
அறிந்துகொள்வது எப்படி?
www.safewater.fssai.gov.in என்ற இணைய தளத்தில் இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) மூலம் வழங்கப்படும் 7 இலக்க உரிம எண் BIS number (CM/L:XXXXXXX என்று கேன்கள், பாட்டில் களின் மேல் அச்சிடப்பட்டிருக்கும்) அல்லது உணவு பாதுகாப்பு உரிம எண் (FSSAI Licence number) ஆகியவற் றில் ஏதேனும் ஒன்றை பதிவிட்டால், சம்பந்தபட்ட நிறுவனத்தின் குடிநீர் தரமானதா என்பது குறித்து ஆய்வுகூடத்தால் அளிக்கப்பட்ட சான்றை பொதுமக்களே நேரடியாக பார்வையிட்டு தெரிந்துகொள்ள லாம். இந்திய உணவு பாதுகாப்பு ஆணையத் தால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வு கூடத்தில் குடிநீரை பரிசோதித்து 6 மாதங்களுக்கு ஒருமுறை இந்த சான்றை நிறுவனங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
புகார் அளிக்கலாம்
நுகர்வோர் ஒவ்வொரு முறையும் குடிநீர் கேன்களை வாங்கும்போது அவை நன்றாக சீல் செய்யப்பட்டு கசிவின்றி இருக்கிறதா, பேக்கிங் செய்யப்பட்ட தேதி அச்சிடப்பட்டு உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், தரமற்ற குடிநீரை விற்பனை செய்வது தெரியவந்தால் 9444042322 என்ற எண்ணில் மாநில உணவு பாதுகாப்புத் துறையைத் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
3 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago