தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட பெண்ணுக்கும் தமிழிசைக்கும் வாக்குவாதம்

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட பெண்ணுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (திங்கள்கிழமை) பிற்பகலில் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். விமானத்தில் அவருக்கு இரண்டு இருக்கைகளுக்கு பின்னால் தூத்துக்குடி கந்தன் காலனியைச் சேர்ந்த சோபியா (22) என்ற பெண் அமர்ந்து பயணம் செய்தார். விமானம் தூத்துக்குடியை நோக்கி வந்து கொண்டிருந்த போது சோபியா திடீரென எழுந்து மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஆவேசமாகப் பேசியுள்ளார். ஆனால், தமிழிசை பதில் எதுவும் கூறாமல் அமர்ந்திருந்தார்.

விமானம் தூத்துக்குடி விமான நிலையத்தில் தரையிறங்கி பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறங்கி வெளியே வந்தனர். அப்போதும் அந்தப் பெண் பாஜக அரசுக்கு எதிராக ஆவேசமாக கோஷம் போட்டுள்ளார்.

விமான நிலைய வரவேற்புப் பகுதிக்கு வந்த பிறகு, இதுதொடர்பாக அந்தப் பெண்ணிடம் தமிழிசை கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் அந்தப் பெண் தொடர்ந்து பாஜக அரசுக்கு எதிராக அவதூறாகப் பேசியதால் தமிழிசை விமான நிலைய இயக்குநர் மற்றும் விமான நிறுவன அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

அதன்பேரில் அந்த பெண்ணை விமான நிலைய அதிகாரிகள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அதன்பேரில் அந்தப் பெண்ணை போலீஸார் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்தச்  சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

52 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்