சுவ்தேஷ் தர்ஷன் திட்டப் பணிகளுக்கு தொல்லியல் துறை ஒப்புதல் தாமதம்: நடவடிக்கை எடுக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை

By கோ.கார்த்திக்

மாமல்லபுரத்தில் சுவ்தேஷ் தர்ஷன் திட்டத்தின் மூலம் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதற்கான பணிகளுக்கு தொல்லியல் துறையின் ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம், பல்லவ மன்னர்களின் கலைச் சின்னங்களான குடவரை சிற்பங்களால் உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இவற்றைக் கண்டு ரசிப்பதற்காக பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். எனினும், போதிய அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்பு ஏற்படுத்தப்படாததால், சுற்றுலா

பயணிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.

இந்நிலையில், மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்காக, சர்வதேச தரத்தில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசு சுவ்தேஷ் தர்ஷன் திட்டத்தில், சுற்றுலாத் துறைக்கு ரூ.11.63 கோடி நிதி ஒதுக்கியது. இதன்மூலம் சிசிடிவி கேமரா, நவீன கழிப்பறைகள், நடைபாதைகள், கடற்கரை சாலை வசதிகள், அலங்கார மின் விளக்குகள், மீட்புப் படகுகள், கடற்கரையில் இருக்கைகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன.

முதற்கட்ட வரைபடம்

இதற்காக, முதல்கட்டமாக ரூ.6.6 கோடி நிதி அளிக்கப்பட்டது. இப்பணிகளை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள கடற்கரைக் கோயில், ஐந்துரதம், அர்ஜூனன் தபசு பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், அத்துறையின் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. எனவே, பணிகளுக்கான முதற்கட்ட வரைபடம் தயாரித்து தொல்லியல் துறையின் ஒப்புதலுக்கு, பேரூராட்சி மற்றும் சுற்றுலாத் துறை நிர்வாகம் கடந்த ஏப்ரல் மாதம் அனுப்பியது.

ஆனால், 5 மாதங்கள் கடந்தும் ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து தொல்லியல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, சுற்றுலாப் பயணி ஒருவர் கூறியதாவது: சுகாதாரமற்ற கழிப்பறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் சுற்றுலாப் பயணிகள் இன்னல்களைச் சந்தித்து வரும் நிலையில், மேற்கண்ட திட்டத்தில் நவீன கழிப்பறைகள், சிசிடிவி கேமரா அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆனால், பணிகள் தொடங்கப்படாததைக் கண்டு ஏமாற்றமடைந்துள்ளனர். அதனால், சம்பந்தப்பட்ட துறையினர் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றார்.

மாமல்லபுரம் தொல்லியல்துறை அலுவலர் பரணிதரன் கூறியதாவது: சுவ்தேஷ் தர்ஷன் திட்டப் பணிகளுக்கான கோப்புகள் மற்றும் வரைபடங்கள் டெல்லியில் உள்ள தொல்லியல் துறை இயக்குநரத்துக்கு அனுப்பியுள்ளோம். விரைவில் ஒப்புதலுக்கான அறிவிப்புகள் வரும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்