தாய், 3 மகன்கள் தீயில் கருகி உயிரிழப்பு: கொலையா? தற்கொலையா? என போலீஸ் விசாரணை

By எஸ்.நீலவண்ணன்

திருக்கோவிலூர் அருகே தாய் மற்றும் 3 மகன்கள் தீயில் கருகி உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கீழக்குண்டூர் பகுதியை சேர்ந்த இளங்கோவன். இவரது மனைவி தனலஷ்மி (30). இத்தம்பதியருக்கு கமலேஷ்வரன்(7), விஷ்ணுபிரியன்(5), ருத்ரன்(1) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் கூரை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) காலை 5.30 மணியளவில் இளங்கோவனின் தகப்பனார் டீ வாங்கி விட்டு வீடு திரும்பி உள்ளார். அப்போது தனது மருமகள் மற்றும் குழந்தைகள் தங்கி இருந்த கூரை வீடு தீப்பற்றி எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுக்க அனைவரும் வந்து தீயை அனைத்துள்ளனர்.

ஆனால் அதற்குள் தீ வீடு முழுவதும் பரவியதால் 3 குழந்தைகள் உட்பட தனலஷ்மியும் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து கொலையா, தற்கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்