முழு அடைப்பு போராட்டத்தால் திருச்சியில் பாதிப்பில்லை: 7 இடங்களில் மறியல் போராட்டம்

By அ.வேலுச்சாமி

 பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தால் திருச்சியில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் மத்திய அரசைக் கண்டித்து 7 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணமான மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று (திங்கள்கிழமை) நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. ஆனால் திருச்சி மாநகரில் முழு அடைப்பு போராட்டத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

காந்தி மார்க்கெட், சின்னகடை வீதி, பெரியகடைவீதி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் (என்.எஸ்.பி) சாலை, தில்லைநகர், உறையூர், கன்டோன்மென்ட் உட்பட அனைத்து பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கின. வாடகை கார்கள், ஆட்டோ, லாரிகள், வேன்கள் உள்ளிட்டவற்றின் சேவைகளிலும் பாதிப்பு ஏற்படவில்லை. மாநகரம் மட்டுமின்றி திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூர், மருங்காபுரி, மண்ணச்சநல்லூர், மணப்பாறை, முசிறி, திருவெறும்பூர், துவாக்குடி, தொட்டியம் உள்ளிட்ட பகுதிகளிலும் இதேநிலையே காணப்பட்டது.

இதற்கிடையே, பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் திருச்சி காந்தி மார்க்கெட் அருகே கூடி மத்திய அரசுக்கு முழக்கமிட்டனர். பின்னர் மரக்கடையிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக, காந்தி மார்க்கெட் வளைவு அருகிலிருந்து ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். அவர்களைப் போலீஸார் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த இடத்திலேயே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட 150-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல மணப்பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ரயில் மறியலில் ஈடுபட்ட 70 பேர், திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 80 பேர், நம்பர் 1 டோல்கேட்டில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 72 பேர், உப்பிலியபுரத்தில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 35 பேர், புத்தாநத்தத்தில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 21 பேர், மண்ணச்சநல்லூரில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 35 பேர் கைது செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

7 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்