திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 வழிச் சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளை சந்திக்க வந்த ஸ்வராஜ் அபியான் அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் உட்பட 25 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை - சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் 8 வழிச் சாலை அமைக்க மத்திய மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. அதற்காக நிலம் அளவீடு செய்து குறியீடு கற்கள் பதிக்கும் பணி திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் நிறைவு பெற்றுவிட்டது. அதன் தொடர்ச்சியாக நிலங்களை கையகப்படுத்தும் பணியை தமிழக அரசு முடுக்கிவிட்டது.
இந்த நிலையில் 8 வழிச் சாலைக்காக நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்று பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை சென்னை உயர்நீ திமன்றம் திரும்ப பெற்றது. இதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
இதனால், அகில இந்திய அளவில், 8 வழிச் சாலை திட்டத்துக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு செய்தனர். அதன்படி, விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டத்தை திருவண்ணாமலை அடுத்த சி.நம்மியந்தல் கிராமத்தில் வரும் 8-ம் தேதி (இன்று) நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதில், அகில இந்திய விவசாயிகள் சங்க நிர்வாகிகளை வரவழைத்து போராட்டத்தை தீவிரப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக, ஸ்வராஜ் அபியான் அமைப்பு தலைவர் யோகேந்திர யாதவ் தலைமையில் 6 பேர், சேலத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்துக்கு காரில் வந்தனர். செங்கம் அடுத்த பக்கிரிபாளையத்தில் டிஎஸ்பி சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
மேலும், தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் இருந்த 10 விவசாயிகளை புதுபாளையம் பகுதியிலும், சி.நம்மியந்தல் கிராமத்துக்கு வந்த திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் 9 பேரையும் என்று மொத்தம் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago