கோவை மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் வ.உ.சி. மைதானத்தில் நிறுவப்பட்டுள்ள ‘தங்க மரம்’ மக்களுக்கு வைஃபை வசதியை வழங்குகிறது.
இதன் தொடக்க விழாவுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தங்க மரம் மற்றும் எல்.இ.டி. விளம்பரப் பலகையின் செயல்பாட்டை தொடங்கிவைத்தார்.
பின்னர் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வைஃபை வசதியுடன் கூடிய தங்கமரம் நிறுவப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.30 லட்சம். மேலும், 25 இடங்களில் இதுபோல தங்க மரம் அமைக்கப்படும்.
சுமார் 900 சதுர அடி பரப்பளவில் அழகிய நாற்காலிகள் வசதியுடன் இது அமைக்கப்பட்டுள்ளது. இலவச வைஃபை வசதி 350 மீட்டர் சுற்றளவு பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 30 இருக்கைகள் கொண்ட 10 அழகிய வடிவிலான நாற்காலிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மின் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்த மரத்துக்கான மின்சாரம் சோலார் மின் சக்தி மூலம் பெறப்படுகிறது. மின்சாரத்தை சேமிக்க பேட்டரி மற்றும் இன்வர்ட்டர் பயன்படுத்தப்படுகிறது.
சோலார் மின் சக்தியில்லாத நேரத்தில் மின்சாரப் பயன்பாடு தடையின்றி கிடைக்க மின் இணைப்பும் பெறப்பட்டுள்ளது. மழைநீரை சேமிக்கும் வகையில் மரத்தைச் சுற்றிலும் புல்தரை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்கள், மாநகராட்சியின் திட்டப்பணிகள் தொடர்பாக பொதுமக்கள் தெரிந்து கொள்ளம் வகையில் பெரிய அளவிலான எல்.இ.டி. விளம்பரப் பலகையும் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, சிசிடிவி கண்காணிப்புக் கேமரா உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த வளாகத்தில் சிறு விழாக்களுக்கு அனுமதி அளிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது” என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago