‘சைமா’ மருத்துவமனைக்கு மூதாட்டி ரூ.3 லட்சம் நன்கொடை: தி இந்து செய்தி எதிரொலி

By செய்திப்பிரிவு

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு அருகே உள்ள ‘சைமா’ (நிவாஸ் இளைஞர்கள் நற்பணி சங்கம்) மருத்துவமனையில் 2 ரூபாய்க்கு தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று ‘தி இந்து’வின் ‘பூச்செண்டு’ பகுதியில் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

மருத்துவ சேவை மட்டுமின்றி சத்தமில்லாமல் பல சேவைகளை செய்துவரும் ‘சைமா’ பற்றி ‘தி இந்து’வில் செய்தி வெளி யானதில் இருந்தே, அந்த அமைப்புக்கு பாராட்டும் நிதியும் குவிந்துவருகிறது. சென்னை கே.கே.நகரை சேர்ந்த கே.பி.வேதாம்பாள் என்ற மூதாட்டி, ‘சைமா’வுக்கு ரூ.3 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து வேதாம்பாள் கூறும்போது, ‘‘தி இந்துவில் சைமா குறித்த செய்தியை படித்ததுமே அந்த அமைப்புக்கு உதவவேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். மருத்துவம் மட்டுமல்லாது, பின்தங்கியமாணவர்களுக்கு கல்விச் சேவையும் அவர்கள் செய்வதுபாராட்டுக்குரியது. அதனால் தான் உடனே ரூ.3 லட்சம் வழங்கினேன். முன்பே தெரிந்திருந்தால் நானும் அவர்களோடு இணைந்து சேவை செய்திருப்பேன். வயது 78 ஆகிறது. அதனால், பொருளாதார உதவி மட்டுமே செய்ய முடிந்தது’’ என்றார்.

‘சைமா’ செயலாளர் சம்பத்குமார் கூறும்போது, ‘‘தி இந்து வில் இச்செய்தி வெளியானதில் இருந்தே, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் எங்கள் அமைப் புக்கு பாராட்டுக் கடிதங்கள், நிதியுதவிகள் வந்தவண்ணம் உள்ளன. எங்களை ஊக்கப்படுத்தி உதவி செய்த வேதாம்பாள் உட்பட அனைவருக்கும் நன்றி’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்