அலுவலகம், வாகன வசதி, உதவியாளர்கள் இன்றி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பெரிதும் தவிப்பு: அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாத பரிதாபம்

By மு.யுவராஜ்

அலுவலகம், வாகன வசதி, உதவியாளர்கள் இன்றி அன்றாட பணிகளை கூட மேற்கொள்ள முடியாமல் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பரிதவித்து வருகின் றனர்.

தமிழகம் முழுவதும் 350-க்கும் மேற்பட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்

றனர். இவர்கள், நுகர்வோரிடம் இருந்து வரும் புகார்களின் அடிப்படையில் கலப்படம், சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் திடீர் ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.

ஆய்வின் முடிவில், உணவு பொருட்களின் மாதிரிகளை சேகரித்து  ஆய்வகங்களுக்கு அனுப்பிவைக்கின்றனர். ஆய்வில், கலப்படம் அல்லது சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனைசெய்யப்பட்டது உறுதி செய்யப்பட் டால் பொருட்களைப் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

தனி அலுவலகம் இல்லை

இந்நிலையில், 350-க்கும் மேற்பட்ட உணவுப் பாதுகாப்பு அலு வலர்களில் தர்மபுரி, கிருஷ்ணகிரி உட்பட தமிழகம் முழுவதும் பணிபுரியும் சுமார் 200 உணவுப் பாதுகாப்பு அலுவலர்களுக்கு தனி அலுவலகம் இல்லை.

இதனால், பறிமுதல் செய்யப் படும் பொருட்களை எங்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைப்பது என்று கூட தெரியாமல் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பரிதவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சிலர் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் சுமார் 200 உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு தனி அலுவலகம் இல்லை. இதனால், பறிமுதல் செய்யப்படும் பொருட்களை எங்களுடைய வீட்டிலேயே வைத்து கொள்ள வேண்டியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பான ஆவணங்களை கூட பராமரிக்க முடியாத நிலை உள்ளது.

உணவுப் பாதுகாப்பு அலுவலர்களுக்கு யாருக்கும் உதவியாளர் கள் நியமிக்கப்படவில்லை. இதனால், பறிமுதல் செய்யப்படும் பொருட்களை தனி ஆளாக கொண்டு வர முடியாத சூழல் உள்ளது.

இதுதவிர, பறிமுதல் செய்யப்படும் பொருட்களை கொண்டு செல்ல எந்த வாகன வசதிகளும் ஏற்படுத்தி தரப்படவில்லை.

உதவியாளர்கள் இன்றி தனியாகச் செல்வதால் சட்டவிரோத விற்பனையில் ஈடுபடுபவர்கள் எங்களைத் தாக்கும் அபாயமும் உள்ளது.

பரிதவித்து வருகிறோம்

இதனால், பணிகளைத் துரிதமாக செய்ய முடியாமல் பரிதவித்து வருகிறோம். எங்களுக்கான பணி விதிகள் கூட இதுவரை ஏற்படுத்தித்  தரப்படவில்லை.

இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகளும், அரசும் தலையிட்டு எங்களுடைய அடிப்படைத் தேவைகளைப்  பூர்த்தி செய்து தர வேண்டும். அப்போதுதான் பணிகளை, சிறப்பாக மேற்கொள்ள முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்