வேலை தேடும் இளைஞர்கள் தங்களது சுயதிறனை மதிப்பீடு செய்து மேம்படுத்திக் கொள்ளும் வகையில் அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தர டிஜிட்டல் வேலைவாய்ப்பு முறைக்கான இணைய பக்கங் களை விரைவில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அறிமுகம் செய்யவுள்ளது.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் சுய தொழில் முனைவோர் மற்றும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக் கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தற்போது ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமைகளில் தனியார் நிறுவனங் களை ஒருங்கிணைத்து வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக மட்டுமே நடப்பு ஆண்டில் தமிழகத் தில் 44 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
குறைவானவர்களே தேர்வு
ஆனால் இத்தகைய முகாம் களுக்கு வரும் தனியார் நிறுவ னங்கள் அதிக எதிர்பார்ப்புகளு டனும் வேலைவாய்ப்புகளுடனும் வந்தாலும், குறைவான அளவி லேயே பணியாளர்களை தேர்வு செய்கின்றன. இதற்கு காரணம் வேலைக்காக வருவோரில் பல ருக்கு அதற்குரிய திறன் இருப்பதில்லை என்பது முக்கிய காரணமாக தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அதிகாரி ஒருவர் ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறும்போது, ‘‘உதார ணமாக ஒரு வேலைவாய்ப்பு முகாமில் 1500 காலிப் பணியிடங் களுக்கு பணியாளர்களைத் தேடி நிறுவனங்கள் வந்தால், 100 பேர் மட்டுமே தேர்வாகின்றனர். நிறுவ னங்கள் எதிர்பார்க்கும் திறனானது தேர்வுக்கு வருவோரிடம் இல்லா மல் இருப்பதே அதற்கு முக்கிய காரணம். இதனால் வாய்ப்புகள் பல இருந்தும் அவற்றை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலை உள்ளது’’ என்றார்.
இதைத் தவிர்க்க இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் வேலை தேடி நிறுவனங்களை நாடும் முன் னதாகவே தங்களது திறனை சுயமதிப்பீடு செய்து கொள்ளும் வகையில் பிரத்யேக இணைய பக்கத்தை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை உருவாக்கி வருகிறது. இது இளைஞர்கள் தங் களது பணிக்கான திறனை பரி சோதித்துக் கொள்ளவும், தேவைப் பட்டால் திறனை மேம்படுத்திக் கொள்ளவும் உதவும் என கூறப் படுகிறது.
இதுபற்றி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அதிகாரி களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:
இளைஞர்கள், வேலை நாடு வோர் இந்த இணைய பக்கத்தில் சென்று அதில் கோரப்படும் தகவல்களை அளிப்பதன் மூலமாக துறைவாரியாக தங்களுக்கான திறன் (ஸ்கில்), எத்துறையில் தங்களுக்கு அதிக ஆர்வம் உள்ளது என்பதை அறிய முடியும். கிடைக்கும் பதிலைப் பெற்று, பிறகு தங்களது விருப்பத்துக்கு ஏற்ற வகையில் பயிற்சி மூலமாக திறனை வளர்த்துக் கொண்டு, மீண்டும் இணைய பக்கத்தில் மதிப்பீடு செய்யும்போது போதிய திறனைப் பெற்றிருந்தால் அதில் ஸ்கில் ஓகே என்று வந்துவிடும். போதிய திறனுடன் நிறுவனங்களை நாடும்போது எளிதாக அதிக ஊதியத்துடன் வேலையைப் பெற முடியும்.
தவிர, வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை அளிக்கும் தனியார் சார்ந்த இணைய பக்கங்கள், செய லிகள் பல தற்போது வந்துவிட் டன. அவற்றின் வகை சார்ந்த இணைய பக்கம் ஒன்றும் உருவாக் கப்பட்டு வருகிறது. வேலை நாடுவோர் இதில் தங்களது சுயவிவரங்கள், கல்வித் தகுதி, எந்த துறையில் பணி எதிர்பார்க்கிறார் என்பன உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்தால் போதும். அவர் களுக்கான பணி வாய்ப்புகள் எந்த நிறுவனத்தில், எங்கு உள்ளது, எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற தகவல்கள் உடனுக்குடன் அளிக்கப்படும். இதை ஒரு டிஜிட்டல் வேலைவாய்ப்பு முகாம் என்று கூறலாம்.
பிரத்யேக இணைய பக்கங் கள் உருவாக்கப்படுவது இதுவே முதல்முறை. ரூ.87 லட்சம் செல வில் உருவாக்கப்படுகிறது. இரு இணைய பக்கங்களும் விரை வில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளன. இத்தகைய நட வடிக்கைகள் வேலை நாடு வோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago