திருக்காலிமேடு நகராட்சி குப்பை கிடங்கில் தேங்கியுள்ள 80 ஆயிரம் டன் குப்பையை, ரூ.7 கோடி செலவில் அகற்ற நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதால், நத்தப்பேட்டை ஏரி தூய்மையடைவதற்கான வாய்ப்பு கள் ஏற்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் பெருநகராட்சியில் 51 வார்டுகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரு கின்றனர். மேலும், ஏராளமான வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. இவற்றிலிருந்து வெளியேற்றப்படும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து கொட்டுவதற்காக, 27-வது வார்டு திருக்காலிமேடு பகுதியில் நத்தப்பேட்டை ஏரிக்கரையில் குப்பை கிடங்கு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இதில், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக குப்பை கொட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டதால், குப்பை கிடங்கு அருகே மக்கும் மற்றும் மக்காத குப்பை தரம் பிரிப்பதற்காக கிடங்கு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, நகரப் பகுதியில் நாள் ஒன்றுக்கு 65 டன் குப்பை சேகரமாகிறது. இதில், 15 டன் பிளாஸ்டிக் கழிவுகளாக உள்ளன. இந்தப் பிளாஸ்டிக் கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் சிமென்ட் தொழிற்சாலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தி வருவதாகத் தெரிகிறது.
காஞ்சி நகராட்சியில் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகளை பெரம்பலூர், அரியலூரில் உள்ள தனியார் சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில், கடந்த இரண்டு மாதங்களில் 148 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அனுப்பப்பட்டுள்ளன. எனி னும், நத்தப்பேட்டை ஏரிக்கரையில் பல ஆண்டுகளாக பிளாஸ்டிக் கழிவுகளுடன் கூடிய குப்பை அகற்றப்படாமல் தேங்கியுள்ளது.
இந்நிலையில், அண்ணா பல்கலை. தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவி யோடு நத்தப்பேட்டை ஏரிக்கரையில் தேங்கியுள்ள குப்பையை, தரம் பிரித்து அகற்ற நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதால், நத்தப்பேட்டை ஏரி தூய்மையடைவதற்கான வாய்ப்பு கள் ஏற்பட்டுள்ளன.
இதுகுறித்து, காஞ்சிபுரம் நகராட்சி நிர்வாக வட்டாரங்கள், ‘திருக்காலிமேட்டில் 20 ஏக்கர் பரப்பளவில் தேங்கியுள்ள 80 ஆயிரம் டன் குப்பை பாலித்தீன் பைகள், சாக்குகள், தேங்காய் சிரட்டை, ரப்பர், செருப்பு, டயர், தேங்காய் நார், இரும்பு என தனித்தனியாகப் பிரித்து அகற்றப்பட உள்ளன. இதற்காக ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசின் நிர்வாக அனுமதியும் பெறப் பட்டுள்ளது. மேலும், அண்ணா பல் கலையின் தொழில்நுட்ப வல்லுநர்கள் குப்பை கிடங்கை நேரில் பார்வை யிட்டு, பணிகளை எவ்வாறு மேற் கொள்ள வேண்டும் எனப் பல்வேறு தொழில்நுட்ப திட்டங்களை வழங்கி யுள்ளதால், விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. குப்பை அகற் றப்படுவதன் மூலம், பொழுதுபோக்கு பூங்கா அல்லது வேறு ஏதேனும் பயன்பாட்டிற்கு அந்நிலத்தை பயன் படுத்த முடியும். மேலும், நத்தப் பேட்டை ஏரி முற்றிலும் தூய்மை யடைந்து மீண்டும் விவசாயிகளின் பாசனத்திற்கு பயன்படும் நீர் நிலையாக மாறுவதற்கான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது' என்று தெரிவித்தன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago