சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் கொசுத்தொல்லை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. 1,800 கி.மீ. நீளமுள்ள மழைநீர் கால்வாயில் கழிவுநீர் கலப்பதே இதற்கு முக்கிய காரணமாக கூறப் படுகிறது.
சென்னையில் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதையடுத்து ஒரு வீடு இருந்த இடத்தில் 4 வீடுகள் முதல் 20 வீடு கள் கொண்ட குடியிருப்புகள் கட்டப் படுகின்றன. இப்படி ஒவ்வொரு தெருவிலும் ஏராளமான குடியிருப்பு கள் வந்துள்ளன. ஆனால், அத்தெருக் களில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத் தில் பதிக்கப்பட்ட சிறிய விட்டமுள்ள கழிவுநீர் குழாய்களே இருக்கின்றன. இவற்றில் அழுத்தம் காரணமாக வெடிப்பு ஏற்பட்டு ஆள்நுழைவுக் குழி (Manhole) வழியாக கழிவுநீர் வெளியேறி தெருக்களில் வழிந்தோடுகிறது. இதனால் சுகா தாரச் சீர்கேடும், கொசுத் தொல்லை யும் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, “சென்னை மாநகரின் பெரும் பாலான பகுதிகளில் ஆங்காங்கே வழிந்தோடும் கழிவுநீரை அப்புறப் படுத்த முடியவில்லை. அதனால் மழைநீர் கால்வாயில் கழிவுநீரைக் கலக்கின்றனர். இவ்வாறு கலப்ப தால், மழைநீர் கால்வாயில் ஆண்டு முழுவதும் கழிவுநீர் ஓடி, நிரந்தர கொசு உற்பத்திப் பண்ணைகளாகி விட்டன. இப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் கொசுத் தொல்லையைக் கட்டுப்படுத்தவே முடியாது” என்றனர்.
இதுகுறித்து அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலையாறு ஆகிய 4 ஆறுகளும், விருகம்பாக்கம் கால்வாய், கொடுங்கையூர் கால் வாய், ஏகாங்கிபுரம் கால்வாய், வியாசர்பாடி கால்வாய் உள்ளிட்ட 34 கால்வாய்களும் சேர்ந்து சென்னை யில் 240 கி.மீ. தூரத்துக்கு நீர்வழிப் பாதைகள் உள்ளன. மாநகராட்சி பராமரிப்பில் 1,800 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால் கால்வாய்கள் உள்ளன. ஆங்கிலே யர் ஆட்சிக் காலத்தில் சிறிய குழாய்களாக பதிக்கப்பட்ட கழிவுநீர் குழாய்களில் அளவுக்கு அதிகமாக கழிவுநீர் செல்வதால் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு தெருக்களில் வழிந்தோடுகிறது.
இதைத் தடுக்க அனைத்து பகுதி களிலும் பெரிய விட்டமுள்ள கழிவுநீர் குழாய்களைப் பதிக்க வேண்டும். அதைவிடுத்து தெருவின் ஒருபுறம் செல்லும் மழைநீர் கால் வாய்க்கும், 5 அடி முதல் 10 அடி தொலைவில் மறுபுறம் செல்லும் கழிவுநீர் கால்வாய்க்கும் இணைப்பு ஏற்படுத்திவிடுகின்றனர். இதனால் மழைக்காலத்தில் மட்டும் தண்ணீர் செல்ல வேண்டிய கால்வாயில் ஆண்டு முழுவதும் 40 சதவீதம் கழிவு நீர் ஓடிக் கொண்டிருக்கிறது. அங்கு தான் கொசுக்கள் உற்பத்தியாகின் றன. சென்னை மாநகராட்சியும், சென்னைக் குடிநீர் வாரியமும் இணைந்து கூட்டு முயற்சி செய்தால் மட்டுமே கொசுத் தொல்லையை ஒழிக்க முடியும்.
தென்மேற்கு பருவமழைக்கு முன்னரே நீர்வழிப் பாதைகளில் மண்டிக் கிடக்கும் ஆகாயத் தாமரை களை அகற்றியிருக்க வேண்டும். இப்போது அந்த பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இப்போது தான் ரூ.25 கோடி செலவில் நீர்வழிப் பாதைகளைத் தூர்வாருதல், ஆகாயத் தாமரைகளை அகற்றுதல் ஆகிய பணிகள் முடுக்கிவிடப்பட் டுள்ளன. கொசு அதிகரிப்புக்கு இதுவே காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொசு ஒழிப்புக்காக கொசு மருந்து தெளிப்பு, நீர்வழிப் பாதையின் கரை யோரங்களில் கொசுப்புழு நாசினி தெளித்தல், நீர்வழிப் பாதைகளில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்று தல், வாகனங்கள் மூலம் புகை பரப்பு தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன என்று மாநகராட்சி தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் கொசுத் தொல்லையை நிரந்தரமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க் கின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago