மாவட்டங்களில் தனிப்படையை கண்காணிக்க வேண்டும்: கஞ்சாவை ஒழிக்க 19 பரிந்துரைகள்; காவல் ஆணையரிடம் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு

By இ.ராமகிருஷ்ணன்

கஞ்சா போதைப் பொருளை முற்றிலும் ஒழிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தனிப்படையினர் ஆய்வறிக்கை ஒன்றை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் அளித்துள்ளனர். அதில், மாவட்ட காவல் துணை ஆணையர்களின் தனிப்படையை கண்காணிக்க வேண்டும் என்பன உட்பட 19 பரிந்துரைகள் அளிக்கப் பட்டுள்ளன.

போதைப் பழக்கத்துக்கு பள்ளி, கல்லூரி மாணவர்களும் அதிக அளவில் அடிமையாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. சென்னையை பொருத்தவரை கஞ்சா விற்பனை போலீஸாருக்கு சவாலாக இருக்கிறது. இவற்றை கட்டுப்படுத்த சென்னையில் உள்ள 12 காவல்மாவட்ட துணை ஆணையர்கள்,48 சரக உதவி ஆணையர்கள்,135 காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தாலும் கஞ்சாவை முற்றிலும் போலீஸாரால் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

இதைத் தொடர்ந்து கஞ்சா எங்கிருந்து சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது, எதன் மூலம் எந்த வழியாக கடத்தி வரப்படுகிறது, எங்கெல்லாம் விற்பனை செய்யப்படுகிறது என்பது உட்பட அனைத்து தக

வல்களையும் திரட்ட தனிப்படை போலீஸாருக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தர விட்டார்.

அதன்படி, கடந்த 2 மாதங்களுக்கு மேலாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தற்போது ஆணையரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது, எங்கு விற்பனை செய்யப்படுகிறது, அதை தடுப்பதற்கான வழிமுறைகள் என 19பரிந்துரைகள் சுட்டிக்காட்டப் பட்டுள்ளன. அதன் விபரம்:

 மதுரை, திண்டுக்கல்,தேனி மாவட்டங்களைச் சேர்ந்தசிலர் ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினம் பாடகிரி மலைக்குச் சென்று மொத்தமாக கஞ்சாவாங்கி தங்களின் மாவட்டங் களுக்கு கொண்டு செல்கின் றனர். சென்னை வழியாக இந்தகடத்தல் நடக்கிறது. முறையாக கண்காணித்து இதை கட்டுப் படுத்தலாம்.

கஞ்சாவுக்கு அடிமையானவர்கள் சமூக வலைதளங்களில் (Blocked Group- Weed smokers)

என்ற இணைய முகநூலில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். சமூக வலைதளம் மூலம் இதை கண்டறிந்து முடக்கலாம்.

கோரமண்டல் விரைவு ரயில், ஹவுரா மெயில், சார்மினார் விரைவு ரயில் மற்றும் விசாகப்பட்டினத்தில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா தேனி

மற்றும் கம்பம் போன்ற இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு எழும்பூர் ரயில் நிலையம் கடத்திசெல்லப்படுவதால் எழும்பூரில் இருந்து புறப்படும் மற்றும் வந்துசேரும் அனைத்து விரைவு ரயில்களையும் முறையாக தணிக்கை செய்ய வேண்டும்.

கூலிக்கு கஞ்சா கடத்திவருபவர்கள் மட்டுமே கைதுசெய்யப்படுகின்றனர். அதன்பின்னணியில் உள்ளவர்களையும் வாகன உரிமையாளர்களை யும் கைது செய்ய வேண்டும்.

 மாவட்ட காவல் துணை

ஆணையர்களின் தனிப்படை யினரின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். கூடுதல் காவல் ஆணையர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து மாதம் இருமுறை சிறப்பு வாகன தணிக்கை செய்ய வேண்டும். மாவட்ட எல்லைகளை முழுமையாக கண்காணிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறும்போது, "போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிப்பதே காவல்துறை யின் நோக்கம்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்