திருவண்ணாமலை அருகே கவுத்தி மலையில் இருந்து உற்பத்தியாகும் துரிஞ்சலாற்றை நம்பி உருவானது ‘நந்தன் கால்வாய்’ திட்டம். திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 ஏரிகள், விழுப்புரம் மாவட்டத்தில் 22 ஏரிகள் என 36 ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டது.
நந்தன் கால்வாயில் முழுமையாக தண்ணீர் ஓடவில்லை. இத்திட்டத்துக்காக அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் 10.4 கி.மீ. தூரத்துக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 25.46 கி.மீ. தூரத்துக்கும் நீர் வரத்து வாய்க்கால் வெட்டப்பட்டது. இதன்மூலம் திருவண்ணாமலை தாலுகாவில் 1,566 ஏக்கர், விழுப்புரம் மாவட்டத்தில் 5,032 ஏக்கர் என மொத்தம் 6,598 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
ஆனால், 1886-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்ட நந்தன் கால்வாய் திட்டம் சுமார்132 ஆண்டுகள் கடந்த பிறகும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால், பாசன கால்வாய்கள் தூர்ந்து போய்விட்டன.
திமுக ஆட்சியில் வேளாண் அமைச்சராக இருந்த கோவிந்தசாமி, கடந்த 1970-ம் ஆண்டு நந்தன் கால்வாய் திட்டத்தை புனரமைக்க பணிகள் துவங்கி 1976-ம் ஆண்டு நிறைவு பெற்றது. நந்தன்கால்வாய் திட்டத்துக்காக 1970-76-ம் ஆண்டுகளில் ரூ.1 கோடியே 28 லட்சம்ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணியைச் செய்த முன்னாள் அமைச்சர்கோவிந்தசாமியை நினைவு கூறும்வகையில் பனமலை ஏரிக்கரையில் விவாசயிகள் சார்பில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டது. அதன்பிறகு நந்தன் கால்வாய் பராமரிக்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்தாண்டு மார்ச் 3-ம் தேதி சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நந்தன் கால்வாயில் ஆய்வுமேற்கொண்டனர்.
அப்போது சி.வி.சண்முகம் கூறும்போது, "பெண்ணையாறு - பாலாறு நதிநீர் இணைப்புத் திட்டத்தை நந்தன் கால்வாய் மூலமாகசெயல்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள 2016-17 கொள்கை விளக்க குறிப்பில் சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து திட்ட மதிப்பீடு தயாரிக்க அரசின் நிர்வாக அனுமதி கோரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விழுப்புரம் மாவட்டம் பாக்கம் ஏரியிலிருந்து (மலைசார் நீர் பிடிப்பு பகுதி) உற்பத்தியாகும் வராக நதிக்கும் உபரி நீர் வழங்கி திட்டத்தை செம்மைப்படுத்த இயலும்'' என்றார்.
இந்நிலையில் இன்று (ஜூன் 19) சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் பொதுப்பணித்துறை நிதி ஒதுக்கீடு ஆய்வுக் கூட்டம்நடைபெற உள்ளது. விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், முதல்வரின்ஆய்வுக் கூட்டத்தில் நந்தன் கால்வாயை சீரமைப்புக்கு நிதிஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புவிக்கிரவாண்டி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago