அரசு மருத்துவமனைகளில் அடிக்கடி பழுதாகும் இலவச அமரர் ஊர்திகள்: உடல்களை எடுத்துச் செல்வதில் சிரமம்

By இ.ஜெகநாதன்

அரசு மருத்துவமனைகளில் இலவச அமரர் ஊர்திகள் பற்றாக்குறையாலும், அடிக்கடி பழுதாவதாலும் உடல்களை எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

தமிழகத்தில் இலவச அமரர் ஊர்தி திட்டம் 2011-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் 160-க்கும் மேற்பட்ட அமரர் ஊர்திகள் உள்ளன. இவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் மட்டும் இயங்குகின்றன. ஆனால், எந்த அரசு மருத்துவமனையில் ஒருவர் இறந்தாலும் இந்த வாகனத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். 155377, 28888180 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்தால் வாகனங்கள் ஏற்பாடு செய்து தரப்படும்.

தமிழகம் மட்டுமல்லாது வெளிநாட்டில் இறந்தாலும் விமான நிலையத்துக்கு கொண்டு வரப்படும் சடலத்தை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வர். சில சமயங்களில் இறந்தவர்களின் உடலை ரயிலில் கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர்.

அந்த உடலை ரயிலில் கொண்டு செல்வதற்குக்கூட கட்டணம் கிடையாது. இதனால் அமரர் ஊர்தி சேவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஆரம்பத்தில் புதிய வாகனங்கள் வாங்கிக் கொடுக்கப்பட்டன. தற்போது 108 ஆம்புலன்சில் பயன்படுத்திய பழைய வாகனங்களையே அமரர் ஊர்தி சேவைக்கு கொடுக்கின்றனர். இதனால், அந்த வாகனங்கள் அடிக்கடி பழுதாகின்றன. பெரும்பாலான மாவட்டங்களுக்கு 2 அல்லது 3 வாகனங்களே அதிகபட்சம் வழங்கப்பட்டுள்ளன. அரசு மருத்து வமனைகளில் இறப்போர் மட்டுமின்றி கொலை, தற்கொலை செய்து கொண்டோர் உடல்களையும் எடுத்துச் செல்ல வேண்டி உள்ளதால் வாகனங்களுக்குப் பற்றாக்குறை உள்ளது. இதனால் பலருக்கு இலவச அமரர் ஊர்தி சேவையே கிடைப்பதில்லை.

இதுகுறித்து சிவகங்கையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எம்.எஸ். கண்ணன் கூறியதாவது: சிவ கங்கை மாவட்டத்தில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காரைக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனை என 2 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சமீபகாலமாக, காரைக்குடியில் இருந்த வாகனம் பழுதடைந்ததால், ஒரு வாகனம் மட்டும் இயங்கி வருகிறது. ஆனால், சிவகங்கை மாவட்டத்தில் தினமும் 5-க்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர். அமரர் ஊர்தி வாகனங்கள் இல்லாமல் அவர்களின் உடல் களைக் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. கூடுதல் வாகனங்களை ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவர் ஒருவர் கூறுகையில், சிவகங்கை வாகனம் வெளியூர் சென்றால் காரைக்குடி, பரமக்குடி வாகனங்களை ஏற்பாடு செய்து கொடுப்போம். தற்போது காரைக்குடி, பரமக்குடியிலும் வாகனம் இல்லாதது சிரமமாக உள்ளது. இருந்தாலும் ஏழைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாகன வசதி செய்து தருகிறோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்