தாயிடம் மது போதையில் தகராறு: தம்பி கல்லால் அடித்துக்கொலை; அண்ணன் கைது

By க.ராதாகிருஷ்ணன்

கரூர் அருகே தாயிடம் மது போதையில் தகராறு செய்த தம்பியை கல்லால் அடித்துக்கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டார்.

கரூர் அருகேயுள்ள ஆத்தூர் நத்தமேடு சோளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவர் மனைவி அம்சவள்ளி (42). இவரின் மகன்கள் நந்தகுமார் (21), கவுதம் (19). நந்தகுமார் ஆக்டிங் டிரைவராக உள்ளார், திருமணமாகிவிட்டது. கவுதம் பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படித்து வந்த நிலையில் படிப்பை பாதியில் விட்டுவிட்டு பெயிண்டர் வேலை பார்த்து வந்துள்ளார்.

தாய் அம்சவள்ளியிடம் கவுதம் நேற்று முன்தினம் மது போதையில் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த நந்தகுமார் அங்குள்ள பாட்டி வீட்டுக்குச் சென்றிருந்த தம்பி கவுதமிடம் இதுகுறித்துக் கேட்க இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த அம்மிக் கல்லை எடுத்து கவுதம் தலையில் நந்தகுமார் தாக்கியதில் கவுதம் படுகாயமடைந்தார்.

கரூர் தனியார் மருத்துவமனையில் கவுதமை சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து வாங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நந்தகுமாரைக் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்