கோவையில் சதிச்செயல் அரங்கேற்ற திட்டம்?- ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் மேலும் 3 பேர் கைது?

By டி.ஜி.ரகுபதி

கோவையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தீவிர ஆதரவாளர்கள் 3 பேரை மாநகர போலீஸார் நேற்று கைது செய்தனர். இதுதொடர்பாக, மேலும் 5 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந் தன. இதில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப் புக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

மேலும் 5 பேரிடம் விசாரணை

இதையடுத்து, என்ஐஏ அதிகாரிகள் குழுவினர் டிஎஸ்பி விக்ரம் தலைமையில் கடந்த 12-ம் தேதி முகமது அசாருதீன், போத்தனூர் திருமறை நகரைச் சேர்ந்த அக்ரம் ஜிந்தா (26), தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த ஷேக் இதாயத்துல்லா (38), இப்ராஹிம் என்ற ஷாகிம்ஷா (28), குனியமுத்தூரைச் சேர்ந்த அபுபக்கர் (29), போத்தனூர் உமர் நகரைச் சேர்ந்த சதாம் உசேன் (26) ஆகிய 6 பேரின் வீடுகளில் சோதனை நடத்தினர். இறுதியில், தென்மாநிலங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடத்த மூளைச்சலவை செய்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு இளைஞர்களை திரட்டியதாகவும் அதற்காக நிதி திரட்டியதாகவும் முகமது அசாருதீனை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து, கொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்ற 5 பேரிடம் கொச்சி அலுவலகத்தில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேற்கண்ட 6 பேர் அளித்த தகவலின் பேரில், கோவையில் உள்ள என்ஐஏ அதிகாரிகள் நேற்று முன்தினம் (13-ம் தேதி) உக்கடம், ஜி.எம்.நகர், வின்சென்ட் சாலையைச் சேர்ந்த 5 பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் ஒருவரை கோவை என்ஐஏ அலுவலகத்திலும், மற்ற 3 பேரை கொச்சி என்ஐஏ அலுவலகத்திலும் வெள்ளிக்கிழமை (நேற்று) ஆஜராகும்படி சம்மன் அளித்தனர். அதன்படி, இவர்கள் ஆஜராகினர்.

இந்நிலையில், உக்கடம் வின்சென்ட் சாலை யைச் சேர்ந்த முகமது உசேன், அன்புநகரைச் சேர்ந்த ஷாஜகான், கரும்புக்கடையைச் சேர்ந்த ஷேக் ஷபிபுல்லா ஆகியோர், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தீவிர ஆதரவாளர் கள் என தகவல் கிடைத்தது. மேலும் இவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொள்கைகளையும் தீவிரவாத செயல்களை இளைஞர்களிடம் சமூகவலைதளங்கள் மூலமாக பரப்பியும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு அடித்தளம் அமைத் தும் மேற்கண்ட தீவிரவாத அமைப்பின் சதிச் செயல்களை கோவையில் அரங்கேற்ற திட்டம் தீட்டி வருவதாகவும் மாநகர போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போத்தனூர் போலீஸார் மூன்று பேரிடமும் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தி மூவரையும் நேற்று கைது செய்ததாக தெரிகிறது. இதில் ஷாஜகான் மருந்து விற்பனைப் பிரதிநிதியாக பணி யாற்றி வருகிறார். இந்த வழக்கு கோவை சட்டம் ஒழுங்கு போலீஸாரிடம் இருந்து, என்ஐஏ-க்கு சில நாட்களில் மாற்றப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE