அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று ராஜன்செல்லப்பா எம்எல்ஏ எழுப்பிய குரலைத் தொடர்ந்து அக்கட்சியில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்பிக்கள், முன்னணி நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று (12-ம் தேதி) நடக்கிறது.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக, பெருந்துறைத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் அதிருப்திக் குரல் எழுப்பி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர், கட்சியின் ஜெ.பேரவை மாநிலப்பொறுப்பை ராஜினாமா செய்வதாகக் கூறி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ராஜினாமா கடிதம் கொடுத்து பரப்பரப்பு ஏற்படுத்தினார்.
இந்நிலையில், இன்று (12-ம் தேதி) நடைபெறும் ஒற்றைத் தலைமை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் குறித்து ‘இந்து தமிழ்’க்கு தோப்பு என்.டி.வெங்கடாசலம் அளித்த பேட்டி:
பல்வேறு காரணங்களால், எனது கட்சிப்பதவியை ராஜினாமா செய்தேன். இருப்பினும் நான் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராகவும், எம்.எல்.ஏ.வாகவும் உள்ளேன். மக்களவைத் தேர்தல் தோல்விக்கான காரணங்களை விவாதிப்பதற்காக, கட்சித்தலைமை எங்களை அழைத்துள்ளது. அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதே என் அடிப்படை கருத்து. அதன் அடிப்படையில் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறேன்.
கடந்த காலங்களில் நாங்கள் சொன்ன சில கருத்துகளை, கட்சித்தலைமை கவனத்தில் எடுத்து இருந்தால், தற்போதைய தேர்தல் தோல்வி தவிர்க்கப்பட்டு இருக்கும். தேர்தலின்போது நடந்த தவறுகள் குறித்து ஆலோசித்து, கட்சியையும், ஆட்சியையும் நல்ல பாதையில் கொண்டு செல்ல இந்த ஆலோசனை உதவும் என நம்புகிறேன், என்றார்.
‘உங்களது அதிருப்தியை கூட்டத்தில் வெளிப்படுத்துவீர்களா’ எனக் கேட்டபோது, ‘அதுகுறித்து இப்போது சொல்ல முடியாது’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
37 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago