காரைக்குடியில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.20 கோடி மதிப்பு கண்மாய் நிலத்தை மீட்ட ஆட்சியர்

By இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம், காரைக் குடியில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.20 கோடி மதிப்புள்ள கண் மாய் புறம்போக்கு நிலத்தை ஆட்சி யர் ஜெ.ஜெயகாந்தன் மீட்க நட வடிக்கை மேற்கொண்டார். காரைக்குடி கழனிவாசல் பகுதியில் மணக்காட்டி கண் மாய் உள்ளது. சுமார் எட்டு ஏக்கர் பரப்புள்ள இக்கண்மாய் மூலம், கடந்த காலத்தில் பல நூறு ஏக்கரில் விவசாயம் நடைபெற்றது. காலப்போக்கில் காரைக்குடி நகரின் வளர்ச்சியால் கண்மாய் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது.

சிலர் அக்கண்மாயை ஆக்கிர மித்து கடைகள், கிடங்குகளை அமைத்தனர். நான்கு ஏக்கருக்கு மேல் முழுமையாக ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. இதையடுத்து, கண் மாயை மீட்க அப்பகுதியினர் வலியுறுத்தினர். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் ஆக்கிரமிப்புகளை அகற்றி அக் கண்மாயை மீட்க வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டார். இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் வந்த நிலையிலும், காரைக்குடி வட்டாட்சியர் பாலாஜி தலை மையில் கண்மாய் ஆக்கிரமிப் புகள் முழுமையாக அகற்றப் பட்டன.

இதன்மூலம் ரூ.20 கோடி மதிப்புள்ள கண்மாய் நிலம் மீட் கப்பட்டது. இதுகுறித்து ஆட்சியர் ஜெய காந்தன் கூறியதாவது: கண் மாய் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிந்ததும் கண்மாய், வரத்துக் கால்வாய் முழுவதும் தூர் வாரப்படும். இதன்மூலம், நிலத்தடி நீர்மட்டம் மேம்படும். இதேபோல, மாவட்டம் முழுவதும் நீர்நிலை களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்