தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவி: ஜூலை 18-ல் தேர்தல்

By மு.அப்துல் முத்தலீஃப்

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் ஜூலை 18- அன்று நடக்க உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மக்களவை மற்றும் மாநிலங்களவை (Council of States) அல்லது ராஜ்ய சபா (Rajya Sabha) என்ற இரண்டு அடுக்கு முறை உள்ளது. மாநில சட்டமன்ற பிரதிநிதித்துவ அடிப்படையில் இயங்கும் மாநிலங்களவையில் மொத்தம் 245 உறுப்பினர்கள் உள்ளனர்.

இதில் 233 பேர்  இந்திய மாநிலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களால் விகிதாச்சார பிரதிநித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

மாநிலங்களவை உறுப்பினரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். மேலவையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவடையும்.

மாநிலங்களவைத் தலைவராக குடியரசுத் துணைத்தலைவர் பதவி வகிக்கிறார். மாநிலங்களவை கூட்டங்கள் மக்களவை கூட்டங்களைப் போல் அல்லாமல் தொடர்ச்சியாக நடைபெறும்.

ஒவ்வொரு மாநில பிரதிநிதித்துவ அடிப்படையில் தமிழகத்துக்கு மொத்தமாக 18 எம்பிக்கள் உள்ளனர். இதில் மூன்று கட்டங்களாக வெவ்வேறு காலக்கட்டத்தில் முறையே 6 எம்பிக்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தற்போதுள்ளவர்களில் பதவி காலம் முடிவடையும் 6 பேர் இவர்கள் ஜூலை 25, 2013- ஜூலை 24, 2019 வரை பதவியில் உள்ளவர்கள்

1.கே. ஆர். அருணன்  (அதிமுக)

2. வி. மைத்ரேயன் (அதிமுக)    3. ஆர். லட்சுமணன் (அதிமுக)

4. D. ராஜா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி –அதிமுக ஆதரவால் தேர்வு)  

5. கனிமொழி (திமுக) ஜூலை

6. D. இரத்தினவேல் (அதிமுக)

ஜூலை 18 அன்று தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிப்பாணை ஜூலை 1

மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள்- ஜூலை 8

வேட்பு மனு பரிசீலனை ஜூலை 9

வேட்பு மனுவை திரும்பப்பெற கடைசி நாள்- ஜூலை 11

தேர்தல் ஜூலை 18 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.

தேர்தல் நடைமுறை முடிவுக்கு வரும் நாள் ஜூலை.22

மாநிலங்களவைக்கு தேர்தல் நடக்க பெரும்பாலும் வாய்ப்பு இல்லை. தற்போதுள்ள நிலையில் திமுக, அதிமுக இரண்டுக்கட்சிகளும்  சமபலத்தில் ஆளுக்கு 3 எம்பிக்களை பிரித்துக்கொள்ள வாய்ப்புள்ளதால் தேர்தலுக்கு வாய்ப்பில்லை.

தற்போதுள்ள நிலையில் திமுக அணியில் வைகோ மற்றும் இருவருக்கு வாய்ப்பு உள்ளது. அதிமுக அணியில் பாமகவுக்கு ஒரு எம்பியும் 2 எம்பிக்கள் யார் எனவும் அறிவிக்கவில்லை.

மேலும் பதவியில் உள்ள தமிழக எம்பிக்களும் பதவி காலமும்:

 

கடந்த 2014-ம் ஆண்டு தேர்வாகி அடுத்த ஆண்டு 2020 வரை பதவியில் இருக்கும் எம்பிக்கள்

1. பெரிய கருப்பன்,(அதிமுக)

2. சசிகலா புஷ்பா, (அதிமுக)

3. விஜிலா சத்யானந்த், (அதிமுக)

4. திருச்சி சிவா (திமுக),

5. டி.கே.ரங்கராஜன், (சிபிஎம்)

6. கே.செல்வராஜ் (அதிமுக)

2016-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு 2022 வரை பதவியில் இருக்கும் எம்பிக்கள்.

1.நவநீதகிருஷ்ணன்,

2.விஜயகுமார்,

3. ஆர்.வைத்தியலிங்கம்,

4. எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்,(இவர்கள் அனைவரும் அதிமுக)

5. ஆர்.எஸ்.பாரதி,

6. டி.கே.எஸ்.இளங்கோவன்.(இருவரும் திமுக)

இதில் தற்போது 2013-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட எம்பிக்களின் பதவி காலம் நிறைவடைவதை ஒட்டி தேர்தல் நடக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்