காரைக்குடியில் இட நெருக்கடியால் அரசு பள்ளியில் சேர முடியாமல் மாணவர்கள் ஏமாற்றம்: சாதனை பள்ளிக்கு அரசு கை கொடுக்குமா?

By இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் இட நெருக்கடியால் ஆறாம் வகுப்பில் 150 மாணவர்களைச் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள், பெற்றோர் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தனியார் பள்ளிகள் மீதான மோகத்தால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்துகொண்டே வருகிறது. அதைத் தடுக்க முடியாமல் அரசுப் பள்ளி நிர்வாகங்கள் திணறுகின்றன. ஆனால், அனை வரையும் ஆச்சரியப் படுத்தும் வகையில் காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

நடுநிலைப் பள்ளியாக இருந்த இப்பள்ளி, 2013-2014-ம் கல்வியாண்டில் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது 6 ஆசிரியர்களும் 218 மாணவர்களும் இருந்தனர். தனியார் பள்ளிகளைப் போன்று சீருடை, டை, ஷூ அணியும் முறை இங்கு கொண்டு வரப்பட்டது பெற்றோரிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

2014- 2015-ம் கல்வியாண்டில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப் பட்டது. மேலும் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவி யல் பாடங்களுடன் கூடுதலாக கணினி அறிவியல், பொது அறிவுப் பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன.

தரம் உயர்த்தப்பட்டதில் இருந்தே ஐந்து ஆண்டுகளாக 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை இப்பள்ளி பெற்று வருகிறது. இதனால் மாணவர் எண்ணிக்கையும் படிப் படியாக உயர்ந்தது.

2014-2515-ம் கல்வியாண்டில் 318 மாணவர்கள், 2015-16-ல் 478 பேர், 2016-17-ல் 650 பேர், 2017-18-ல் 950 பேர், 2018-19-ல் 1,192 பேர் என ஆண்டுதோறும் மாணவர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த ஆண்டே இடம் கிடைக்காமல் 6-ம் வகுப்பு ஷிப்ட் முறைக்கு மாற்றப்பட்டது. இந்த ஆண்டு கோடை விடுமுறையின்போதே அதாவது பள்ளி திறப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே ஏப்.30-ல் மாணவர் சேர்க்கை முடிந்தது. அதற்கான அறிவிப்பும் பலகையும் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது.

ஆறாம் வகுப்புக்கு மொத்தம் 450 மாணவர்கள் விண்ணப்பித்ததில் ஆங்கில வழிக் கல்வியில் 250 மாணவர்களும், தமிழ்வழிக் கல்வியில் 50 மாணவர்களுக்கும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். 150 பேருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு மொத்தம் 1,320 மாணவர்கள் பயில்கின்றனர்.

இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் ஆ. பீட்டர்ராஜா கூறிய தாவது: ஆசிரியர் களுடன் சேர்ந்து மாணவர் எண்ணிக்கையை உயர்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம். வகுப்பு வாரி யாகப் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டங்களை நடத்தி பள்ளி வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கை களை எடுத்து வருகிறோம். பெற்றோரும் தாமாக முன் வந்து 2016-ல் கல்விச் சீராக ரூ.1.70 லட்சத்துக்கும், 2018-ல் 3.70 லட்சத்துக்கும் ஏராளமான பொருட்களை அளித்தனர்.

தற்போது பள்ளியில் 28 நிரந்தர ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் 13 ஆசிரியர்களும் பணிபுரிகின் றனர். எங்கள் பள்ளிக்கு தனியாக இணையதளம், முகநூல் பக்கம் தொடங்கி தினமும் பதிவேற்றம் செய்கிறோம். பள்ளியில் 30 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. இடநெருக்கடியால் மாணவர் சேர்க்கையை முடித்துவிட்டோம். இந்த அறிவிப்பால் பெற்றோர் பலர் ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்