புதுச்சேரியில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 11,27,940 வாகனங்கள் உள்ளன. இதில் 7,70, 839 பைக்குகள் இயங்குகின்றன. வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய பார்க்கிங் வசதிகள் இங்கில்லை. இதனால் பெரிய பிரச்சினையாக பார்க்கிங் உருவெடுத்துள்ளது.
புதுச்சேரி நகரின் மையப்பகுதியில் அண்ணா சாலை, காந்தி வீதி, புஸ்ஸி வீசி, நேரு வீதி, காமராஜர் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் ஜவுளிக்கடைகள், நகை கடைகள், திரையரங்குகள், ஸ்டார் ஓட்டல்கள், மார்க் கெட் உள்ளிட்டவைகள் அமைந்துள்ளன.
இந்த வீதிகள் அனைத்தும் வொயிட் டவுன் எனப்படும் பகுதியோடு இணைக்கப்பட்டிருக் கின்றன. கடற்கரை சாலை, மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம், பாரதி பூங்கா, அருங்காட்சியகம், பாரம்பரிய கட்டிடங்கள் என அனைத்தும் உள்ளன. இங்கு சுற்றி பார்க்க நாள்தோறும் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வருகை புரிகின்றனர்.
அதோடு, உள்ளூர் மக்கள் மட்டுமின்றி கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஆடை உள்ளிட்ட பொருட்கள் வாங்க பலர் இங்கு வருகின்றனர். பெரும்பாலும் இங்கு வருபவர்கள் கார், பைக் உள்ளிட்டவைகளிலேயே வந்து செல்கின்றனர். இதனால் புதுச்சேரி நகர் பகுதி போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.
அண்ணா சாலை, காமராஜர், நேரு வீதி போன்ற சாலைகளில் பெரிய வணிக நிறுவனங் களில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர் கள் வந்து செல்கின்றனர். அங்கு பார்க்கிங் வசதி இன்றி விதி மீறிச் செயல்படுகின்றன.
சில நிறுவனங்கள் மட்டும் குறைவான வாகனங்களை நிறுத்த வசதி செய்துள்ளன. பார்க்கிங் வசதி செய்யாத நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங் களை, சாலையிலேயே குறுக்கும், நெடுக் குமாக நிறுத்திச் செல்கின்றனர். அதனால் நெரிசல் அதிகமாகி போக்குவரத்து தடைப் படுகிறது.
பாதசாரிகள் செல்லும் பாதைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அவர்களும் சாலையிலேயே நடக்க வேண்டியிருக்கிறது. இதன் காரணமாக விபத்துக்களும் ஏற்படு கின்றன. புதுச்சேரியில் நெருக்கடியான பகுதியில் வாகனங்களை நிறுத்த போதிய மல்டிபிள் பார்க்கிங் வசதிகளோ, மேம்பாலங்களோ அல்லது போதிய அளவிலான இடவசதி களோ ஏற்படுத்தப்படவில்லை. இதனிடையே, நேரு வீதியில் பழைய சிறைச்சாலை வளாகத்தில் தற்போது வாகனங்கள் நிறுத்தப் படுகின்றன. பல்கி பெருகியிருக்கும் வாகனங் களுக்கு அது மட்டும் போதாது. இங்கு மல்டிபிள் பார்க்கிங் கட்ட ஏற்பாடு செய்யப் பட்டது. ஆனால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி நகர திட்டக் குழுமம் (பிபிஏ) அதிகாரிகள் கூறும்போது, புதுச்சேரியில் அனைத்து புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்களிலும் பார்க்கிங் வசதி கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால் கடைபிடிப்பதில்லை. பெரிய வணிக நிறுவ னங்கள் சில காலியாக இருக்கும் மனை களை பார்க்கிங்காக மாற்றி வருமானம் ஈட்டுகின்றனர்.
பிபிஏ சட்டவிதிகளின்படி ஒவ்வொரு 70 சதுர மீட்டர் பரப்பளவுக்கு 30 சதுர மீட்டர் பார்க்கிங்குக்கு ஒதுக்க வேண்டும். ஆனால், நிறுவனங்கள் அதைச் செய்வதில்லை.தன்னார்வ அமைப்பினர் கூறும்போது, புதுச்சேரியில் பாதசாரிகள் நடந்து செல்லும் வகையில் பாதை இருக்க வேண்டும். அதற்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மக்கள் பாதைகளில் நடந்து சென்றால் போக்குவரத்து பாதிக்கப்படுவது குறையும். சாலைகளில் குப்பைகள், கட்டிடக்கழிவு, கட்டுமானப் பொருட்கள் கொட்டுவதை நிறுத்த வேண்டும்.பெரும்பாலான தெருக் கள் குறுகியதாக உள்ளன.
இதனால் பார்க்கிங் செய்ய முடிய வில்லை. ஒவ்வொரு சாலைக்கும் அதற்கு ஏற்ப போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும். வணிக நிறுவனங்கள் கட்டும் போதே கண்டிப்பாக பார்க்கிங் வசதி ஏற் படுத்த வேண்டும் என்று கூறுகின்றனர் இன்டாக் நிறுவன அதிகாரிகள். பழைய துறைமுகம், பழைய சாராய ஆலை உள்ளிட்ட இடங்களை தேர்வு செய்து பார்க்கிங் ஏற்படுத்தினால் ஓரளவு போக்குவரத்தை குறைக்க முடியும், என்கின்றனர்.
போக்குவரத்து போலீஸார் கூறுகையில், புதுச்சேரியில் போக்குவரத்து மிகுதியான சாலைகளில் ஒருபக்க பார்க்கிங் வசதி ஏற்படுத்தி வருகிறோம். நேரு வீதி போன்று புஸ்ஸி வீதியிலும் 6 மாதங்களுக்கு ஒரு முறை ஒருபக்க பார்க்கிங் மாற்றப்படுகிறது. ஆனால் போலீஸார் நிறுத்தக்கூடாது என்று அறிவுறுத்தும் பக்கம் தான் வாகனங்களை நிறுத்துகின்றனர்.
அவர்கள் மீது அபராதம் விதிப்பதோடு, நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். அதுபோல் கனரக வானங்கள் காலை 6 மணியில் இருந்தும் 11 மணி வரையும், மாலை 3 மணியில் இருந்து 8 மணி வரையும் வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறியும் கனரக வாகனங்கள் வருகின்றன என்று குறிப்பிடுகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
54 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago