கோவையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட இடங்கள்: வைரலான வாட்ஸ் அப் தகவல் தவறானது; காவல்துறை எச்சரிக்கை

By டி.ஜி.ரகுபதி

கோவையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட இடங்கள் குறித்து, வாட்ஸ் அப்பில் செய்தி வெளியான நிலையில் இது குறித்து போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

#கோவையில் தீவிரவாதிகள் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட இடங்கள்...

#இந்து_கோவில்கள்...

1.கோணியம்மன் கோவில்- டவுன்ஹால்

2.ரத்தின விநாயகர் கோவில்- ஆர்.எஸ்.புரம்

3.மருதமலை முருகன் கோவில்

4.ஆஞ்சநேயர் கோவில்-அவிநாசி ரோடு

*

#கிறிஸ்தவ_ஆலயங்கள்...

1.சிஎஸ்ஐ சர்ச்- ரேஸ்கோர்ஸ்

2.OUR LADY சர்ச்- காந்திபுரம்

என்ற செய்தி வாட்ஸ் அப்பில் வைரலாகிப் பரவி வருகிறது.

இந்நிலையில், ''அந்தத் தகவல் தவறானது. சமூக வலைதளங்களில் சிலர் தவறான தகவல் பரப்புகின்றனர். அதை நம்ப வேண்டாம்'' என போலீஸார் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து கோவை மாநகர காவல் துணை ஆணையர் பாலாஜி சரவணன் கூறும் போது, ''கோவையில் தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்படும் என வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது. ஆதாரமற்ற, உறுதித் தன்மையற்ற, மத ரீதியிலான மோதலை ஏற்படும் பொய் தகவல்களை பரப்பினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சைபர் கிரைம் போலீஸார் இது தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE