செயற்கை மழை வரவழைக்க ஆய்வு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழகத்தில் செயற்கை மழை வரவழைப்பதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. பல்வேறு பகுதிகளில் முறையாக தண்ணீர் வழங்கக் கோரி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், செயற்கை மழை வரவழைப்பதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

நெல்லையில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, "செயற்கை மழை வர வைப்பது தொடர்பாக கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. அதனை மேற்கொண்ட எல்லா இடங்களிலும் செயற்கை மழை தோல்வி அடைந்திருக்கிறது. செயற்கை மழை தொடர்பான ஆய்வுகள் எதிர்பார்த்த அளவு இல்லை. இருந்தாலும், அதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. நிலத்தடி நீர், மழைநீர் சேமிப்பு, கல்குவாரிகள் மூலம் நீர் ஆதாரம் எடுக்கப்பட்டு வருகிறது.

ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் முயற்சி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் 2-3 வாரங்களில் இந்த பணி முழுமையடையும்" என, தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE