தமிழக மீனவர்களின் பிரச்சினை குறித்து சுஷ்மா ஸ்வராஜூடன் ராமநாதபுரம் எம்பி ஆலோசனை

By ஆர்.ஷபிமுன்னா

இலங்கையில் மீன்பிடிக்க செல்லும் போது தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கும் முயற்சியில் ராமநாதபுரம் எம்.பி.யான கே.நவாஸ்கனி ஈடுபட்டுள்ளார். இதற்காக, முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூடன் நேற்று அவர் ஆலோசனை நடத்தி னார்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப் படும் பிரச்சினை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அத்துடன், அவர்களின் மீன்பிடிப் படகுகளும் கைப்பற்றப்படுகின்றன.

தற்போது இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் எவரும் இல்லை என்றபோதிலும், அவர்களி டமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 156 மீன்பிடி படகுகள் இலங்கை அரசின் கைவசம் உள்ளன.அவற்றை மீட்டுக் கொடுக்கவும், கைது நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டும் முயற்சியிலும் ராமநாதபுரம் தொகுதியின் புதிய எம்.பி.யான நவாஸ்கனி ஈடுபட்டுள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில ஆலோசகராகவும் உள்ள இவர், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொண் டுள்ளார். இந்த வாய்ப்பை பயன் படுத்தி நவாஸ்கனி, வெளியுறவுத் துறையின் முன்னாள் மத்திய அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜூடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

பாஜக மூத்த தலைவரான சுஷ்மா, தனது உடல்நலக் குறைவு காரணமாக இந்தமுறை தேர்தலில் போட்டியிடவில்லை. டெல்லியின் சப்தர்ஜங்கில் உள்ள சுஷ்மாவின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதுகுறித்து, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் நவாஸ்கனி கூறிய போது, "இலங்கை கடற்படையிடம் சிக்கும் தமிழக மீனவர்களை மீட்பதில் அதிக ஆர்வம் காட்டியவர் சுஷ்மா. வெளியுறவுத் துறையின் முன்னாள் அமைச்சர் என்பதால் தமிழக மீனவர்களின் பிரச்சினை குறித்து அவரிடம் ஆலோசனை நடத்தினேன். இலங்கையில் உள்ள தூதரக அதிகாரிகள் சிலரைக் குறிப்பிட்ட அவர், அவர்களைச் சந்திக்குமாறு அறிவுறுத்தினார். மேலும் அவர் கூறிய பல ஆலோசனைகள் தமிழக மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உதவியாக இருக்கும் என நம்புகிறேன்" என்றார்.

வழக்கமாக இலங்கை ராணுவத்தினரிடம் சிக்கும் தமிழக மீனவர்களை மீட்க தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுப்பதன்பேரில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், இலங்கை அரசிடம் பேசி தமிழக மீனவர்களை மீட்டு வருகிறது.

இந்த கைது நடவடிக்கை உள்ளிட்ட பிரச்சினைகளில் இருநாட்டு மீனவர்களின் பேச்சு வார்த்தை பலமுறை நடைபெற்று தோல்வியில் முடிந்த நிலையில், மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் நடத்தும் முயற்சியிலும் நவாஸ்கனி இறங்கியுள்ளார்.

இதற்காக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் அவர் சந்திக்க உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்