பெட்ரோலிய குழாய்கள் அமைக்க நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கிருஷ்ணகிரி வரட்டனபள்ளியில் பெட்ரோலிய குழாய்கள் அமைப்பதற்காக  நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் பெட்ரோலிய பொருட்களை கொண்டு செல்வதற்காக தருமபுரி முதல் ஆந்திர மாநிலம் விஜயவாடா வரை குழாய்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டத்திற்குட்பட்ட வரட்டனபள்ளி கிராமத்தில் 1.90 கிலோமீட்டர் தூரத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதன் மூலம் விவசாய நிலங்களையும் கையகப்படுத்துவதால், விவசாயிகள் வீதிக்கு வரவேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படும் என்பதால் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட தமிழக அரசுக்கும், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட கோரி வரட்டனபள்ளி கிராம விவசாயிகள் பொது நல வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

56 mins ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்