தோட்ட வேலைக்காக இலங்கைக்கு சென்று, இனக்கலவரத்தின்போது மீண்டும் தமிழ்நாட்டுக்கு திரும்பிய ‘முகாம்' தமிழர்கள், உயர் நீதி மன்றத் தீர்ப்பால் இந்திய குடி யுரிமை கிடைக்க வாய்ப்பு ஏற்பட் டுள்ளதாக நம்பிக்கை தெரிவித் துள்ளனர்.
இந்தியாவும், இலங்கையும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த 18, 19-ம் நூற்றாண்டு களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக் கான தமிழர்கள் தோட்ட வேலைக் காக இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மலையகத் தமிழர்கள் என அழைக்கப்பட்ட இவர்களை, 1948-ம் ஆண்டு இலங்கையிலிருந்து ஆங்கிலேயர்கள் வெளியேறிய பிறகு இந்தியாவுக்கே அனுப்ப இலங்கை அரசு முயற்சித்தது. 1964-ல் இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும், இலங்கை பிரதமர் சிறிமாவும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி சுமார் 5.25 லட்சம் தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கேயே தங்கியிருந்த 4.5 லட்சத்துக்கும் மேற்பட்டோரில் பல் லாயிரக்கணக்கானோர், இலங்கை யில் ஏற்பட்ட இனக் கலவரம், பாதுகாப்பற்ற சூழலால் 1983-ல் கடல் வழியாக இந்தியாவுக்கு வந்து குடும்பத்தினருடன் முகாம்களில் வசிக்கின்றனர்.
இந்நிலையில், திருச்சி கொட் டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் ஜெகதீஸ்வரன், யோகேஸ்வரன் உள்ளிட்ட 65 பேர், தாயகம் திரும்பியவர்களாகக் கருதி தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தனர்.
குடியுரிமை கோர முடியாது
இந்த மனு அண்மையில் நீதி பதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, "மனுதாரர்கள் சட்டப்பூர்வ பாஸ் போர்ட்டில் இந்தியாவுக்கு வந்தவர் கள் இல்லை" என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு, "சட்டவிரோதமாக இந்தியா வந்தவர்கள், சட்டவிரோத குடியேறிகளாகவே கருதப்படுவர். இவர்கள் இந்திய குடியுரிமை பெற தகுதியற்றவர்கள். இந்திய குடியுரிமையை தங்களின் உரிமையாகக் கோர முடியாது" என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதயத்தில் ரத்தம் கசிகிறது
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்களின் நிலை யைப் பார்க்கும்போது, என் இதயத் தில் ரத்தம் கசிகிறது. இருப்பினும் நீதித்துறையின் லட்சுமண ரேகையை தாண்ட முடியாது. குடியுரிமை வழங்குவது மத்திய அரசை சார்ந்தது. மனுதாரர்கள் இந்திய குடியுரிமை கேட்டு புதிதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். ஆட்சி யர்கள் தாமதமின்றி அந்த விண் ணப்பங்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்த விண்ணப்பங்கள் மீது மத்திய அரசு 16 வாரங்களில் உரிய உத்த ரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
நம்பிக்கை அளித்த தீர்ப்பு
இந்த உத்தரவு குறித்து கொட் டப்பட்டு முகாமில் வசிக்கும் தமிழர்கள், ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியபோது, "எங்களின் தாய்நாடும் இந்தியாதான். தோட்ட வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாங்கள், அங்கு ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக உயிருக்கு பயந்து 1980-85-ம் ஆண்டுகளில் மீண்டும் இந்தியாவுக்கு வந்தோம்.
எங்கள் முன்னோரின் தாய் நாடு என்பதால், எங்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்க வேண் டும் எனக்கேட்டு பல ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். இதுதொடர் பான வழக்கில் தற்போது உயர் நீதிமன்ற மதுரை கிளை அளித் துள்ள தீர்ப்பு பெரும் நம்பிக் கையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய வெளியுறவுத் துறை அமைச் சர் ஜெய்சங்கர் தமிழர், இலங்கை விவகாரங்களை நன்கு அறிந்த வர் என்பதால், பல தலைமுறை களுக்குப் பிறகு தாய்நாடான இந்தியா அங்கீகரிக்கும், நிச்சயம் குடியுரிமை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்’’ என்றனர்.
மனுதாரர்களின் வழக்கறிஞரான ஜான் வின்சென்ட் கூறியபோது, ‘‘மத்திய, மாநில அரசுகள் நல்ல முடிவை எடுக்கும். தாயகம் திரும் பிய தமிழர்களுக்கு 4 மாதங் களுக்குள் நிச்சயம் விடிவு கிடைக் கும். இது, முன்மாதிரி வழக்காகும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago