மார்க்சிஸ்ட் வேட்பாளர் மனு தள்ளுபடி: ஊராட்சி ஒன்றிய வார்டு தேர்தல் ரத்து: விதிகளை பின்பற்றாத தேர்தல் அலுவலர் சஸ்பெண்ட்

By செய்திப்பிரிவு

மார்க்சிஸ்ட் வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை யடுத்து, சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய வார்டு தேர்தல் ரத்து செய் யப்பட்டுள்ளது. விதிகளை கடைபிடிக்காத உதவித் தேர்தல் அலுவலரை தற்காலிக பணிநீக்கம் செய்ய மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய செயலா ளர் ஜோதி நிர்மலா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யரை சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்தார். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்தி விரிவான அறிக்கை அனுப்புமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டது. அவர் அளித்த அறிக்கை விரிவாக பரிசீலிக்கப்பட்டது. இதன்படி, சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய 2-வது வார்டு உறுப்பினர் பதவிக் கான வேட்புமனு பரிசீலனையில், தேர்தல் நடத்தும் அலுவலரான வட்டார வளர்ச்சி அலுவலர், விதிகளை சரியாக கடைபிடிக்க வில்லை என்பது தெரியவருகிறது. எனவே, அந்த அலுவலரை தற்காலிக பணிநீக்கம் செய்து விரிவான விசாரணை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் அந்த வார்டுக்கான இறுதிப்பட்டியல் வெளியிட இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால், அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற் கான தேர்தல் அறிக்கை பின்னர் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE