சீனாவில் இருந்து இரும்புக் கம்பி இறக்குமதிக்கு தடை விதிக்க கோரிக்கை

By செய்திப்பிரிவு

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்புக் கம்பிகளுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என, மெட்ராஸ் ஸ்டீல் ரோலர்ஸ் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து, மெட்ராஸ் ஸ்டீல் ரோலர்ஸ் சங்க நிர்வாகிகள் சசிகுமார், டாக்டர் சுனில் படோடியா, கௌதம் ரெட்டி ஆகியோர் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

மெட்ராஸ் ஸ்டீல் ரோலர்ஸ் சங்கத்தின் கீழ், 85 ஸ்டீல் உற்பத்தியாளர்கள் சென்னை மற்றும் புதுச்சேரியில் செயல்படுகின்றனர். இந்த ஸ்டீல் ஆலைகளின் மூலம் ஆண்டுக்கு ஆறாயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இதன் மூலம், மத்திய அரசுக்கு ஆயிரம் கோடி ரூபாயும், மாநில அரசுக்கு 400 கோடி ரூபாயும் வரியாக செலுத்தப்படுகிறது.

ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது.

இந்நிலையில், இத்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சீனாவில் இருந்து தரமற்ற ஸ்டீல் இறக்குமதி செய்யப்படுகிறது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரீ-பார் எனப்படும் இரும்புக் கம்பிகள் எத்தகைய தரச்சான்றையும் பெறாதவை. இதற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE