ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் வழக்கு: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு தா.பாண்டியன் வரவேற்பு

By செய்திப்பிரிவு

ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் மரண தண்டனை ரத்து சரியானது என கூறி மத்திய அரசு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு அளித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை: "முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்ததை எதிர்த்து, மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மனப்பூர்வமாக வரவேற்கிறது.

உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பை மதித்து, மத்திய அரசு அதனை அங்கீகரித்திருக்குமேயானால் இந்திய அரசாங்கத்தினுடைய கௌரவம் மேலும் உயர்ந்திருக்கும். ஆனால் காங்கிரஸ் கட்சியின் அதன் தலைவர்களின் தவறான அணுகுமுறையால், உச்சநீதிமன்றம், மத்திய அரசாங்கத்தினுடைய மனுவை தள்ளுபடி செய்யவேண்டிய சூழ்நிலைக்கு உச்சநீதிமன்றம் நிர்ப்பந்திக்கப்பட்டு விட்டது.

மத்திய அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்ததை வரவேற்கும். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, அவர்கள் சிறையில் இருந்த காலத்தை ஆயுள் தண்டனை காலமாகக் கருதி உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும். என்று கேட்டுக்கொள்கிறேன்". இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்