தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டகால்நடை ஆய்வாளர் பணியிடங்கள் காலியாகஉள்ளன. இதனால், கிராமங்களில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 6 பன்முக மருத்துவமனைகள், 22 பெரு மருத்துவமனைகள், 144 மருத்துவமனைகள், 2,601 மருந்தகங்கள், 875 கிளை நிலையங்கள், 56 நடமாடும் நிலையங்கள் உள்ளன.
இங்குள்ள 3,000-க்கும் மேற்பட்ட கால்நடை ஆய்வாளர் பணியிடங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது தமிழகம்முழுவதும் 900-க்கும் குறைவானவர்களே பணியில் உள்ளனர். மேலும் மருந்தகங்கள், மருத்துவமனைகளிலும் ஆய்வாளர்களை நியமிப்பது கிடையாது. இதனால் மாநிலம் முழுவதும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. களப்பணி செய்ய ஆள் இல்லாதநிலை உள்ளது. கிராமங்களில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் கால்நடை வளர்ப்போர் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து கால்நடை ஆய்வாளர்கள் கூறியதாவது: கடந்த காலங்களில் பிளஸ் 2 முடித்தோருக்கு 11 மாத பயிற்சி அளித்து கால்நடை ஆய்வாளராக நியமித்தனர். கடந்த 7 ஆண்டுகளாக பயிற்சி அளிப்பது நிறுத்தப்பட்டு, கால்நடை ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் ஆண்டுதோறும் கால்நடை ஆய்வாளர் காலிப் பணியிடங்கள் அதிகரித்து வருகின்றன.
கால்நடை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தினால், கிளை நிலையங்களை மருந்தகங்களாக தரம் உயர்த்தி மருத்துவர்களை நியமிப்பதாகக் கூறுகின்றனர். அங்கு ஆய்வாளர் பணியிடங்களும் காலியாகவே வைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே வறட்சி காரணமாக பலர் கால்நடை வளர்ப்பதைக் கைவிட்டு வருகின்றனர். சிகிச்சை அளிக்க போதிய ஆட்கள் இல்லாததால் கால்நடை வளர்ப்போர் சிரமப்படுகின்றனர். இதை உணர்ந்து ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
58 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago