செம்மர ஏற்றுமதி தடையை நீக்க சர்வதேச அளவில் போராடி வென்ற ஊத்தங்கரை: விவசாயி மர மேம்பாட்டு வாரியம் அமைக்க வலியுறுத்தல்

By ஆர்.கிருஷ்ணகுமார்

செம்மரங்களை (Red Sanders) ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க சர்வதேச அளவில் போராடி, வெற்றி பெற்றுள் ளார் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை யைச் சேர்ந்த விவசாயி ஆர்.பி.கணேசன்.

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த கணேசன் (52), கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் படித்து, தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றியுள்ள இவர், தான் விவசாயியாக மாறியது குறித்து `இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறியதாவது:

“சிறு வயது முதல் மரம் வளர்ப்பில் நான் ஆர்வம் கொண்டிருந்தேன். 1989-ல், வனத் துறை ஆலோசனையுடன் புளிய மரம் வளர்த் தேன். அதில் பலன் இல்லை. இதனால் விவ சாயத்திலிருந்து சற்று விலகி, பிரபல கம்ப்யூட் டர் நிறுவன கிளையை ஒசூரில் நடத்தி வந்தேன். 2003-ல் கம்ப்யூட்டர் கல்வியில் ஏற்பட்ட மாற்றம் என் தொழிலை பாதித்தது. எனவே, மீண்டும் விவசாயத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

இவ்வேளையில் கோவை ஏழூரைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி சதாசிவம் எனக்கு செம்மரம் சாகுபடி செய்ய ஆலோசனை வழங்க, 2004-ல் செம்மரம் சாகுபடியைத் தொடங்கினேன். செம்மரத்தை ஏ, பி, சி, டி என 4 வகையாக தரம் பிரிப்பார்கள். அரி தான வகையைச் சேர்ந்த `ஏ' வகை செம்ம ரம் ஒரு டன்னுக்கு ரூ.1 கோடிக்கு மேல் விலை கிடைக்கும்.

சி, டி வகை செம்மரத்தை உரிமம் பெறா மல் எளிதில் பயிரிடலாம். தமிழகத்தில் செம்மரங்களை வெட்டுவதற்கு, வைத்தி ருக்க, எடுத்துச் செல்ல வனத் துறையிடம் அனுமதி பெறுவது அவசியம்.

செம்மர வளர்ப்பில் 20 முதல் 25 ஆண்டு களில் நல்ல பலனைப் பெறலாம். அந்தந்த பகுதி தட்பவெப்பத்தைப் பொறுத்து, குறைந்த அளவு நீர் இருந்தால் போதும். தென்னைக்கு தேவையான நீரில் 20-ல் ஒரு பங்கு நீர் செம்மர வளர்ப்புக்கு போதும். ஆடு, மாடு தின்றுவிடாமல் செம்மர செடிகளை பாது காக்க வேண்டும். அடி உரமிட்டால் வேக மாக வளரும்.

சீனா, ஐரோப்பா, ஜப்பான், அமெரிக்கா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் செம் மரங்களுக்கு ஏற்றுமதி வாய்ப்பு அதிகம். ஆனால், செம்மர ஏற்றுமதிக்கு மத்திய அரசு விதித்திருந்த தடையை நீக்க, கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக முயற்சித்தேன். அப்போதுதான், இயற்கையைப் பாதுகாப்ப தற்கான சர்வதேச ஒன்றியம் (ஐயுசிஎன்), செம்மரங்களை `அழிவை நோக்கிச் செல் லும் மரம் (endangered trees) என்ற பட்டி யலில் வைத்திருந்தது தெரியவந்தது.

தரிசு நிலத்தில் சாதாரணமாக வளரும் செம்மரத்தைப் பற்றி விளக்கமாக எழுதி, ஜெனிவாவில் உள்ள ஐயுசிஎன் அலுவலகத் துக்கு கடிதம் அனுப்பினேன். இதை ஏற்றுக் கொண்ட ஐயுசிஎன், ‘அழிவை நோக்கிச் செல் லும் மரம்’ என்ற பட்டியலில் இருந்து செம் மரத்தை நீக்கியது. வனப் பகுதிகளில் விளை யும் செம்மரத்தை ஏற்றுமதி செய்வதற்கு, `சிடிஸ்' (CITES) என்ற சர்வதேச அமைப்பு தடை விதித்திருந்தது.

இந்திய அரசு, ஒட்டுமொத்தமாக விவசாயிகள் பயிர் செய்யும் செம்மரங்களையும் ஏற்றுமதி செய்ய தடை விதித்திருந்தது. சிடிஸ் அமைப்பின் தடையை இந்திய அரசு சரிவரப் புரிந்து கொள்ளாமல், ஒட்டுமொத்தமாக தடை விதித்துள்ளதாக, சிடிஸ் அமைப்புக்கும் கடிதம் அனுப்பினேன். அந்த அமைப்பும் தடையை நீக்கியது. பின்னர், மத்திய அரசின் வணிகத் துறைக்கும் விண்ணப்பித்து, செம் மர ஏற்றுமதிக்கான தடையை நீக்கச் செய்தேன்.

ஆண்டுதோறும் இந்தியாவின் மரத் தேவையில் 90% இறக்குமதி செய்யப்படு கிறது. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடி. மர வளர்ப்பு மூலம் மரத் தேவைகளை பூர்த்தி செய்வதுடன், ஏற்றுமதி செய்து அந்நி யச் செலாவணியும் ஈட்டலாம். வனப் பகுதி களின் பரப்பை அதிகரிப்பது சிரமம். அதே சமயம், விவசாய நிலங்களில் மரம் வளர்ப்பை ஊக்குவிக்கலாம். தற்போது மரம் வளர்ப்பு, மரம் வெட்டுதல் போன்றவை வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ளன.

இதில் பல்வேறு நிபந்தனைகள், சிக்கல் களும் உள்ளன. இதனால் மரம் வளர்ப்பு ஊக்குவிக்கப்படுவதில்லை. எனவே, மற்ற விவசாயத்துடன், மரங்களையும் சேர்த்து வளர்க்கும் வகையில், மத்திய வேளாண்மைத் துறையின் கீழ் ‘மர மேம்பாட்டு வாரியம்’ அமைப்பதே இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாகும்.

மேலும், பிரதமரின் முக்கிய நோக்கமான, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப் பாக்கும் திட்டத்துக்கும் செம்மர வளர்ப்பு உதவும்” என்றார் விவசாயி கணேசன்.

 

செம்மர வளர்ப்பு நீண்டகால டெபாசிட்

“செம்மரம் வளர்ப்பு என்பது நீண்டகால பண டெபாசிட் போன்றது. செம்மரம் வளர்க்க பெரிய அளவு சிரமம் தேவையில்லை. வீணாகக் கிடக்கும் நிலத்தில் செம்மரங்களை நட்டுவைத்தால், 20-25 ஆண்டுகளில் அவற்றை அறுவடை செய்யலாம். தற்போது ஒரு டன் செம்மரம் ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை (டி, சி, பி தரம்) விலைபோகிறது. நமக்கும், நமது சந்ததிக்கும் செம்மரம் வளர்ப்பு மிகப் பெரிய லாபத்தைக் கொடுக் கும்” என்று கூறும் விவசாயி கணேசனுக்கு, பல்வேறு விவசாயி கள், அமைப்புகள் சேர்ந்து `செம்மரச் செம்மல்' என்ற விருது வழங்கி கவுரவித்துள்ளனர். (தொடர்புக்கு: ganesanrp@gmail.com)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்