பெரும்பாலான அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்காமல் முதல்வர், மாநிலத் தலைவர் மற்றும் இரு எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் மட்டுமே புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த ராகுல் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுலின் 49-வது பிறந்த நாள் விழா இன்று புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்து. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் விழா என்பதால் காங்கிரஸ் சிறப்பாக கொண்டாடத் திட்டமிட்டது.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ராகுல் பிறந்த நாள் விழாவையொட்டி கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தலைமை வகித்தார். கேக்கை வெட்டி முதல்வர் நாராயணசாமிக்கு ஊட்டினார். இந்நிகழ்ச்சியில் அரசு கொறடா அனந்தராமன், எம்எல்ஏ ஜெயமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதர அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணராவ், கமலக்கண்ணன், ஷாஜகான் ஆகியோரும், மீதமுள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களும் பங்கேற்கவில்லை.
ராகுல் பிறந்த நாள் விழாவில் பொறுப்பிலுள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கூட கட்சி அலுவலகத்தில் வராதது தொடர்பாக தொண்டர்கள் குறையுடன் குறிப்பிட்டனர்.
கட்சித் தலைமை தரப்பில் கேட்டதற்கு, "அனைவரும் தொகுதியில் பல்வேறு நிகழ்வுகள் வாயிலாக ராகுல் பிறந்த நாள் விழா கொண்டாடினர்" என்று குறிப்பிட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago