ஆவணத்தில் பெயர் இருக்கு; வசிப்பதற்கு ஆளில்லை: சிவகங்கையில் 19 ‘பேச்சில்லா’ கிராமங்கள்- கடும் வறட்சியால் நேர்ந்த பரிதாபம்

By இ.ஜெகநாதன்

வருவாய்த் துறை ஆவணத்தில் ஊர் பெயர் இருந்தும் மக்களே வசிக்காத பேச்சில்லா கிராமங்கள் சிவகங்கை மாவட்டத்தில் 19 உள் ளன.

சிவகங்கை மாவட்டத்தில் 9 தாலுகா அலுவலகங்களில் சமீபத்தில் ஜமா பந்தி நடைபெற்றது. இதில் கிராம கணக்குகள் ஜமா பந்தி அலுவலர்களால் தணிக்கை செய்யப்பட்டது.

இதில் ஆளே வசிக்காத கிராமங்களின் கணக்குகளும் சரிபார்க்கப்பட்டன. அவ்வாறு மக்களே வசிக்காமல், வெறும் பெயர் மட்டுமே உள்ள பல கிராமங்கள் தமிழகத்தில் உள்ளன. அவற்றை ‘பேச்சில்லா’ கிராமங்கள் என்று அழைக்கின்றனர். வரு வாய்த் துறை ஆவணங்களில் மட்டுமே இருக்கும், இந்த கிரா மங்களில் முற்காலத்தில் மக்கள் வசித்திருப்பர். வறட்சி, வெள்ளம், கொள்ளை நோய், படையெடுப்பு, பெரிய கட்டுமானப் பணிகளுக்காக நிலங்களை கையகப்படுத்துதல், அணை கட்டுதல் போன்ற கார ணங்களால் மக்கள் இடம் பெயர்ந் திருப்பர். சிவகங்கை தாலுகாவில் திராணியேந்தல், கடம்பன்குளம், இளையான்குடியில் மேலபி டாரிச்சேரி, இடைக்காட்டூர், திருப்பத்துாரில் பட்டாக்குறிச்சி, வடமாவலி, திருப்புவனத்தில் அழகாரேந்தல், தவளைக்குளம், வலையனேந்தல், கருப்பனம்பட்டி, மறக்குளம், காளையார்கோவிலில் பிரண்டைகுளம், தென்மாவலி, மானாமதுரையில் காட்டூ ரணி, வலையரேந்தல், தேவ கோட்டையில் சார்வனேந்தல், வண்ணான்வயல், தாழனேந்தல், திவான்வயல் ஆகிய 19 பேச்சில்லா கிராமங்கள் உள்ளன. இதேபோல் மாநிலம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள், ‘பேச்சில்லா’ கிரா மங்களாக உள்ளன.

அனைத்து விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் ஆதிமூலம் கூறியதாவது: திருப் புவனம் புதூரில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் இருக்கும் தவளைக்குளம் பேச்சில்லா கிரா மமாக உள்ளது. 20 ஆண்டு களுக்கு முன் இந்த கிராமம் 50 குடியிருப்புகளுடன் செழிப்போடு இருந்தது. காலப்போக்கில் தொடர் வறட்சியால் விவசாயம் பொய்த்தது. இதனால் அவர்கள் நகரங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டனர். இதேபோல் வறட்சியால்தான் மீதமுள்ள 18 கிராமங்களும் பேச்சில்லா கிராமங்களாக மாறியுள்ளன. இனி வரும் காலங்களில் பேச்சில்லா கிராமங்கள் உருவாகாமல் இருக்க நீர்நிலைகளையும், விவசா யத்தையும் பாதுகாக்க அரசு முயற்சிக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, மக்கள் வசிக்காவிட்டாலும் விவசாய நிலம் உள்ளிட்டவை இருப்பதால், அந்த கிராமங்களின் பெயர்கள் அப்படியே வருவாய்த் துறை ஆவணங்களில் தொடர்கிறது. அவற்றை பேச்சில்லா கிராமங்கள் எனக் குறிப்பிடுகிறோம். சில கிராமங்களில் ஆட்கள் வசிக்கா விட்டாலும் வேளாண் பணி மட்டும் நடக்கிறது. அங்கு கண்மாய்கள் உள்ளன. அருகில் உள்ள பகுதியில் வசிப்போர் விவசாயப் பணிக்கு மட்டும் அந்த கிராமங்களுக்குச் சென்று வருகின்றனர் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்