புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகிராமன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகிராமன் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (திங்கள்கிழமை) அதிகாலை தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார். இவரது உடல் புதுச்சேரி ஆம்பூர் சாலையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, கமலக்கண்ணன், திமுக மாநில அமைப்பாளர்கள் சிவகுமார், சிவா மற்றும் தோழமைக் கட்சியினர் எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து இன்று காலை 8 மணி அளவில் புதுச்சேரியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம் ஜானகிராமன் உடல் அவரது சொந்த ஊரான மரக்காணம் அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் புதுச்சேரி போலீஸார் புதுவை அரசின் சார்பில் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.
திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சி தலைவர் நமச்சிவாயம், அமைச்சர்கள் கமலக்கண்ணன், கந்தசாமி, அரசு கொறடா அனந்தராமன், முன்னாள் அமைச்சர்கள் பன்னீர்செல்வம் பொன்முடி மற்றும் எம்எல்ஏக்கள் திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago