பரோல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட அனுமதி கோரிய மனுவில் நளினியை ஜூலை 5-ம் தேதி நேரில் ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நளினி தனது மகள் திருமணத்திற்காக 6 மாத பரோல் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதேபோல இந்த வழக்கில் நேரில் ஆஜராகி வாதிட அனுமதி கோரியிருந்தார். இதில் காணொலிக் காட்சியின் மூலம் நளினி ஆஜராக விருப்பம் உள்ளதா என அவரிடம் கேட்டறிந்து நீதிமன்றத்தில் தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பரோல் வழக்கில் காணொலிக் காட்சியின் மூலம் ஆஜராகி வாதிட விருப்பமில்லை என நளினி கூறியதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த டிஎஸ்பி தலைமையில் 50 காவலர்கள் பாதுகாப்புக்கு வரவழைக்க வேண்டும் என்பதால் நளினியை ஆஜர்படுத்த ஒரு வாரம் கால அவகாசம் வழங்க வேண்டும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நளினியை ஜூலை 5-ம் தேதி மதியம் ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago