மதுரையில் புதன்கிழமை மு.க. அழகிரி அளித்த பேட்டி:
உங்களுக்கும், தி.மு.க தலை மைக்கும் மத்தியில் சமரசப் பேச்சுவார்த்தை நடந்ததாகக் கூறப்படுகிறதே?
எனக்கு அதுபற்றி தெரியாது. பேப்பரைப் பார்த்துதான் கழகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் என்பதே தெரியும். நோட்டீஸ் அனுப்பும்போது எப்படி சமரசப் பேச்சு வார்த்தைக்கு வருவார்கள்?
பிறந்த நாளன்று முக்கிய அறிவிப்பு வெளியிடுவதாக கூறி யிருந்தீர்களே?
நான் அப்படி ஒன்றும் சொல்லவில்லையே. என்றைக்கு நான் அப்படி சொன்னேன்? சும்மா நீங்களாக இட்டுக்கட்டி சொல்லாதீர்கள். இதெல்லாம் உங்களோட கற்பனை.
ஸ்டாலின் தொண்டர்கள் உங்கள் உருவ பொம்மையை எரித்துள்ளார்களே?
அவர்களை ஸ்டாலின் தொண் டர்கள் என எப்படி கூறுகிறீர்கள். அப்படியென்றால் நேற்றே அவர்கள் எனது பிறந்த நாளைக் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள் என்று அர்த்தம்.
ஸ்டாலினுக்கு மிரட்டல் இருப்பதாகக் கூறி கூடுதல் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளதே?
எதற்காக மிரட்டுகிறார்கள். எதுவும் தப்பு செய்திருக்கிறாரா? அப் படி ஏதாவது இருந்தால் கூடுதல் பாதுகாப்பு கேட்பது நல்லதுதானே.
பாதுகாப்பு கேட்பதில் ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா?
யாருக்காவது கெடுதல் செய் திருக்கலாம். அதனால் அவரை மிரட்டியிருக்கலாம்.
உங்களுக்கும் பாதுகாப்பு கேட்பீர்களா?
தொண்டர்கள்தான் எனக்கு பாதுகாப்பு.
ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து சொன்னதாக தகவல் வெளியானதே?
எனக்குத் தெரியாது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago