கோத்தகிரியில் குத்தகை செலுத்தாததால் பிஎஸ்என்எல் கோபுரத்துக்கு சீல்

By ஆர்.டி.சிவசங்கர்

கோத்தகிரியில் குத்தகை பாக்கி செலுத்தாததால், பிஎஸ்என்எல் கோபுரத்துக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சக்திமலையில் வருவாய்த் துறைக்குச் சொந்தமான நிலத்தில் பிஎஸ்என்எல் நிறுவனதினர் செல்போன் கோபுரம் அமைத்துள்ளனர்.

1993லிருந்து இதுவரை குத்தகைத் தொகையான ஒரு கோடியே 60 லட்சத்து 83 ஆயிரத்து 778  ரூபாயை வருவாய்த்துறைக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் செலுத்தவில்லை எனத் தெரிகிறது.

குத்தகைத் தொகை செலுத்தாததால், கோத்தகிரி வட்டாட்சியர் சங்கீத ராணி இன்று (வியாழக்கிழமை) பிஎஸ்என்எல் கோபுரத்துக்கு சீல் வைத்தார். இதனால், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த கோபுரத்தில் இருந்து 5க்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்களுக்கு இணைப்பு உள்ளதால் அவையும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மின் கோபுரம் சீல் வைக்கப்படுள்ளதால் மின்தடை  ஏற்பட்டால் ஜெனரேட்டர் இயக்குவதற்கு உள்ளே நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு நிறுவனம் இது தொடர்பாக விரைவில்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்