துணைநிலை ஆளுநருக்கான அதிகாரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவு ஜனநாயகத்தை நிலைநாட்டியுள்ளது என்று முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கான அதிகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அப்போது அவருக்கு தடை கொடுக்கப்படவில்லை. கோடை விடுமுறைக்கு பிறகு இந்த வழக்கை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறி வழக்கை தள்ளி வைத்தனர். இந்நிலையில் இன்று இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.
ஆனால், இரண்டு உத்தரவுகளை அவர்கள் பிறப்பித்துள்ளனர். 7-ம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் நிதி சம்மந்தமான முடிவுகள் எடுத்தால் அதனை ஜூன் 21-ம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், முதல்வரின் நாடாளுமன்ற செயலர் லட்சுமிநாராயணன் தலைமை செயலாளர், செயலாளர்களுக்கும் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை என்றால், அந்த அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்போம் என்று கூறிதையும் நிறுத்தி வைத்துள்ளனர்.
முதல்வரை அந்த வழக்கில் பிரதிவாதியாக சேர்க்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. ஆகவே துணைநிலை ஆளுநரின் இடைக்காலத்தடை பெறும் முயற்சி வெற்றி பெறவில்லை.
தொடர்ந்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிகாரிகளை அழைத்து தன்னுடைய அறையில் கூட்டம் நடத்துவது, தன்னிச்சையாக அதிகாரிகளுக்கு உத்தரவிடுவது, பல பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு முதல்வர், அமைச்சர்களின் கவனத்துக்கு கொண்டு வராமல் உத்தரவிடுவது போன்ற செயல்களை செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறியிருக்கிறது. ஆகவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு ஜனநாயகத்தை நிலைநாட்டியுள்ளது, என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago