எல்கேஜி புத்தகத்தில் உதயசூரியன் சின்னம்? - அகற்றக் கோரி வழக்கு

By செய்திப்பிரிவு

எல்கேஜி பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள உதயசூரியன் சின்னத்தை அகற்ற பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புரட்சி சுரேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

எல்கேஜி பாடப் புத்தகத்தில் ஆங்கில எழுத்துகளை அறிமுகப்படுத்துவதற்காக ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு படம் வரையப்பட்டுள்ளது. S என்ற எழுத்தை அறிமுகப் படுத்தும் இடத்தில் SUN என்று எழுதப்பட்டு, சூரியன் கண்ணாடி அணிந்திருப்பதுபோல ஒரு படம் வரையப்பட்டுள்ளது. அந்த படம் தமிழகத்தின் ஒரு அரசியல் கட்சித் தலைவரைப்போல உள்ளது.

அதேபோல, அதிகாலையில் சூரியன் உதிப்பது, சேவல் கூவுவது ஆகியவை தொடர்பாக விளக்கக்கூடிய ஒரு பக்கத்தில் உதயசூரியன் சின்னம் வரையப்பட்டுள்ளது. மழலைக் குழந்தைகளிடத்தில் அரசியல் கருத்துகளைத் திணிப்பதாக உள்ள இச்செயல் சட்ட விரோதமானது. எனவே, எல்கேஜி பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்த பக்கங்களை வரும் கல்வியாண்டுக்கு முன்பு அகற்ற தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் செவ்வாய்க்கிழமை விசார ணைக்கு வந்தது. இம்மனு மீதான விசாரணையை நீதிபதிகள் வியாழக்கிழமைக்கு (நாளை) ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்