பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமன அறிவிப்பை எதிர்த்து வழக்கு

பட்டதாரி ஆசிரியர்களை நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிக் கையை ரத்துசெய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திற னாளிகள் உரிமைகளுக்கான சங்கத்தின் செயலாளர் எஸ்.நம்பு ராஜன் மனுதாக்கல் செய்துள்ளார்.

‘‘மாற்றுத் திறனாளிகளுக்கு 1995-ம் ஆண்டு சட்டத்தின்படி அனைத்து அரசு வேலைவாய்ப்பு களிலும் 3 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் பிறப்பித்துள்ள உத்தரவுகளில், மாற்றுத் திறனாளி களுக்கான இட ஒதுக்கீட்டின்படி நிரப்ப வேண்டிய அனைத்துப் பின்னடைவு காலிப் பணியிடங் களையும் அனைத்து அரசுத் துறைகளிலும் நிரப்ப வேண்டும் என்று கூறியுள்ளன.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசும் கடந்த 4.3.2014 அன்று ஓர் அரசாணையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து அரசுத் துறைகளிலும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களைக் கண்ட றிந்து சிறப்பு நியமன அடிப்படை யில் நிரப்புமாறு கூறப்பட்டுள்ளது அதன்படி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மாற்றுத் திறனாளிக ளுக்கான 1,107 பின்னடைவு காலி இடங்கள் நிரப்பப்பட வேண்டும்.

இந்தச் சூழலில் பட்டதாரி ஆசிரி யர்களை நேரடி நியமனம் செய் வதற்கான ஓர் அறிவிக்கையை கடந்த 14.7.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப் பணியிடங் களை நிரப்பாமல் நேரடி நிய மனம் மூலம் ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டால், மாற்றுத் திறனாளிகள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்.

ஆகவே ஆசிரியர்களை நேரடி நியமனம் செய்வதற்கான 14.7.2014 அறிவிக்கையை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும். மேலும் கடந்த 4.3.2014-ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை அமல் படுத்திய பிறகு, புதிய அறிவிக் கையை வெளியிடும்படி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என்று மனுவில் நம்புராஜன் கூறியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு தொடர்பாக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அக்டோபர் 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE