பாசனத்திற்காக நாளை முதல் திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு: முதல்வர் அறிவிப்பு

திருமூர்த்தி அணையிலிருந்து, பரம்பிக்குளம் பிரதான கால்வாய், உடுமலைப்பேட்டை கால்வாய், உயர்மட்டக் கால்வாய் மற்றும் தளிவாய்க்கால் பாசன அமைப்பின் கீழ் உள்ள விவசாய நிலங்களின் பாசனத்திற்காக நாளை (7.9.2014) முதல் தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள பரம்பிக்குளம் பிரதான கால்வாய் மற்றும் தளி வாய்க்கால் பாசன அமைப்பின் கீழ் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடக் கோரி, திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக் குழு மற்றும் தளி வாய்க்கால் வடபூதிநத்தம் பாசன விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருங்குடிமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருமூர்த்தி அணையிலிருந்து, பரம்பிக்குளம் பிரதான கால்வாய், உடுமலைப்பேட்டை கால்வாய், உயர்மட்டக் கால்வாய் மற்றும் தளிவாய்க்கால் பாசன அமைப்பின் கீழ் உள்ள விவசாய நிலங்களின் பாசனத்திற்காக 7.9.2014 முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்பட்டுள்ளது.

இதனால், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 96,987 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்" இவ்வாறு முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE