வெளிநாட்டு ரசிகர்களை ஒருங்கிணைக்கும் பணியைத் தொடங்கிய புதுவை ரஜினி ரசிகர்கள்

By செ.ஞானபிரகாஷ்

வெளிநாட்டு ரசிகர்களை ஒருங்கிணைக்க புதுச்சேரியில் ரஜினி மக்கள் மன்றத்தின் சேவை மைய காவல் படை இன்று தொடங்கப்பட்டது. இதனை பிரான்ஸ் நாட்டு ரஜினி ரசிகர் திறந்து வைத்தார். பிளஸ் 2 தேர்வில் புதுச்சேரியில் முதல் 3 இடம் பெறுவோருக்கு ரஜினி கையால் சிறப்புப் பரிசு தரவும் திட்டமிட்டுள்ளனர்.

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில் ரஜினி ரசிகர்கள் சார்பாக ரஜினி மக்கள் மன்றத்தின் சேவை மைய காவல்படை இன்று தொடங்கப்பட்டது. இதனை புதுச்சேரி மாநில ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில பொறுப்பாளர் ரஜினி சங்கர் மற்றும் பிரான்ஸ் நாட்டு ரசிகர் பெர்னாட்டு மைக்கேல், பிரகாஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடக்க விழாவில் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்ற மாநில பொறுப்பாளர் ரஜினி சங்கர் 'தி இந்து'விடம் கூறுகையில், "புதுச்சேரி மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பலர் பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கின்றனர். அதில் பலரும் வெளிநாட்டில் வசிக்கின்றனர். ரஜினி ரசிகர்களை ஒருங்கிணைக்க உள்ளனர். தற்போது வெளிநாட்டிலிருந்து வந்த ரசிகர் பிரகாஷ், புதுச்சேரிக்காரர். அவர் இந்த ஒருங்கிணைப்புப் பணியை செய்ய உள்ளார். அதற்காக தனி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடம் பெறும் புதுச்சேரி மாணவர்களுக்கு சிறப்புப் பரிசு தர உள்ளோம். அப்பரிசை ரஜினி கையால் வழங்குவோம். மாணவர்கள் சிறப்பாகப் படித்து இப்பரிசை வெல்ல புதுச்சேரி மன்றத்தின் முதல் அறிவிப்பாக இதை வெளியிடுகிறோம்" என்று குறிப்பிட்டார்.

பிரான்ஸ் ரசிகர் பிரகாஷ் கூறுகையில், "வெளிநாட்டில் ரஜினி ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களை ஒருங்கிணைக்கவே இம்முயற்சி. காவலர்கள் போல் இருக்க வேண்டும் என்று ரஜினி கூறியதால் இப்பெயரை வைத்துள்ளோம்" என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்