அனைத்து உயரழுத்த மின் இணைப் புத் தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 20 சதவீத மின் பயன் பாடு கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தொழிற்துறையினர் மற்றும் வணிக நிறுவனத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில், கடந்த திமுக ஆட்சியின் போது 2008-ம் ஆண்டு கடுமையான மின் பற்றாக்குறை ஏற்பட்டதால், மின் கட்டுப் பாடு அமலுக்கு வந்தது. இதன்படி, அனைத்து உயரழுத்த தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அவர்களுக் கான மொத்த மின் தேவையில் 80 சத வீதம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதேபோல், மாலை 6 மணி முதல் 10 மணி வரை மொத்த தேவையில் 10 சதவீதம் மட்டுமே விநியோகம் செய்யப்படும்.
இந்த மின் விநியோகக் கட்டுப்பாடு, கடந்த 2011-ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி வரும் வரை அமலில் இருந்தது. பின்னர் மேலும் மின் பற்றாக்குறை அதிகரித்ததால், இந்த மின் கட்டுப்பாடு 40 சதவீதமாக உயர்த்தப்பட்டு பின்னர் சில மாதங்களில் 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
பின்னர் புதிய மின் திட்ட உற்பத்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியால் கூடுதல் மின்சாரம் கிடைத்ததால் கடந்த மே 30-ம் தேதி அனைத்து வித மின் கட்டுப்பாடுகளையும் நீக்கி தமிழக அரசு உத்தரவிட்டது. காற்றாலைகள் மற்றும் புதிய மின் நிலைய உற்பத்தியால் மின் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதாக அரசு அறிவித்தது.
இந்நிலையில், மீண்டும் 2008-ம் ஆண்டு உத்தரவுப்படி, 20 சதவீதம் மற்றும் மாலை நேர 90 சதவீத மின் கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு, தமிழக மின் வாரிய வணிகப் பிரிவு தலைமைப் பொறியாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் வாரியத்தின் அனைத்து மாவட்ட தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்புப் பொறியாளர்கள், நிதி வருவாய் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மின் கட்டுப்பாடு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்தத் திடீர் கட்டுப்பாடுகள் குறித்து தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசி யேஷன் தலைமை சட்ட ஆலோசகர் கே.வெங்கடாசலம் கூறியதாவது:
கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய உத்தர வுப்படி, 6 ஆண்டுகளாக மின் கட்டுப் பாட்டை அமல்படுத்துகின்றனர். ஜூன் 1-ம் தேதி முதல் மின் கட்டுப்பாட்டை முழுவதுமாக நீக்குவதாக அறிவித்து விட்டு, தற்போது திடீரென மின் கட்டுப்பாடு தொடரும் என்று அறிவிப்பது தொழிற்துறையினரை கடுமையாகப் பாதிக்கும்.
இந்தக் கட்டுப்பாடுக்கு, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் புதிய உத்தரவு பெற வேண்டியது சட்ட நடவடிக்கையாகும். எனவே, இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்ள வரும் 30-ம் தேதி அனைத்து தொழிற்துறையினரும் கூடி ஆலோசனை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago