ஜூன் 3-ல் ஜிப்மர் நுழைவுத்தேர்வு: வரும் 7-ம் தேதி முதல் ஏப்.13 வரை விண்ணப்பிக்கலாம்

By செ.ஞானபிரகாஷ்

ஜிப்மரில் எம்பிபிஎஸ் நுழைவுத்தேர்வுக்கு வரும் மார்ச் 7-ம் தேதி முதல் ஏப்ரல் 13 வரை விண்ணப்பிக்கலாம். வரும் ஜூன் 3-ம் தேதி நுழைவுத்தேர்வு நடக்கிறது.

புதுச்சேரியில் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 200 எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன. இவ்விடங்கள் ஆண்டுதோறும் நுழைவுத்தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. வரும் கல்வியாண்டுக்கான நுழைவுத்தேர்வு வரும் ஜூன் 3-ம் தேதி காலை, மாலை என இரு பிரிவுகளாக நடக்கிறது.

எம்பிபிஎஸ் படிப்புக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் ( www.jipmer.puducherry.gov.in) மூலமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பதிவு வரும் 7-ம் தேதி காலை 11 மணிக்கு தொடங்குகிறது. வரும் ஏப்ரல் 13 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மே 21-ம் தேதி முதல் ஹால் டிக்கெட்டை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மொத்தமுள்ள 200 இடங்களில் புதுச்சேரி ஜிப்மருக்கு 150 இடங்களும் காரைக்கால் ஜிப்மருக்கு 50 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி, சென்னை, ஹைதராபாத், திருவனந்தபுரம், பெங்களூரு உட்பட 75 நகரங்களில் 120 மையங்களில் ஜூன் 3-ல் நுழைவுத்தேர்வு நடக்கிறது. ஆன்லைன் மூலமே தேர்வு எழுத முடியும். பயோ மெட்ரிக் முறையில் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 800 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கும். அதில் வெல்வோர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். ஒரு கேள்விக்கான மதிப்பெண் நான்காகும். தேர்வு நேரம் இரண்டரை மணி நேரம் என்று ஜிப்மர் தரப்பில் குறிப்பிடுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

55 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்