சர்வதேச மகளிர் தினம்: ஆந்திராவில் பெண்களே நிர்வகிக்கும் ரயில் நிலையம்

By என்.மகேஷ் குமார்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி ரயில் நிலையம் பெண்களே நிர்வகிக்கும் ரயில் நிலையமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தென் மத்திய ரயில்வே துறை பொது மேலாளர் வினோத்குமார் யாதவ் தொடங்கி வைத்தார்.

வேலூரிலிருந்து திருப்பதி வரும் வழியில், திருப்பதிக்கு வெகு அருகில் உள்ள ரயில் நிலையம் சந்திரகிரி. சிறிய ரயில் நிலையமாக இருந்தாலும், இந்த ரயில் நிலையத்தில் 15 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த ரயில் நிலையத்தில் இனி பெண்களே பணியாற்ற உள்ளனர்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய ரயில்வே துறை, தெலங்கானாவில் பேகம்பேட்டை ரயில் நிலையத்தையும் ஆந்திராவில் சித்தூர் மாவட்டம் சந்திரகிரி ரயில் நிலையத்தையும் தேர்வு செய்தது. இதில் முழுவதும் பெண்கள் மட்டுமே பணியாற்றும் வகையில் நேற்று முதல் இந்த ரயில் நிலையம் இயங்கி வருகிறது. அலுவலகப்பணி முதற்கொண்டு, சிக்னல் வழங்குவது, கொடியசைப்பது என அனைத்தும் இந்த ரயில் நிலையத்தில் பெண்களே நிர்வகித்து வருகின்றனர். ஏற்கெனவே, மும்பை, மத்திய பிரதேசத்தில் உள்ள மாதங்கி ரயில் நிலையங்கள் பெண்களால் இயக்கப்பட்டு வருகின்றன.

இதேபோன்று, தென் மத்திய ரயில்வே துறைக்கு உட்பட்ட 6 டிவிஷன்களில் மேலும் 6 பெண்கள் இயக்கும் ரயில் நிலையங்கள் விரைவில் அமைக்கப்படுமென பொது மேலாளர் வினோத் குமார் யாதவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்