பாஜக நியமன எம்எல்ஏக்கள் மூவருக்கும் அனுமதி மறுப்பு; தள்ளுமுள்ளு: ஆளுநர் கிரண்பேடி உரையாற்ற எதிர்ப்பு தெரிவித்து கோஷம்

By செ.ஞானபிரகாஷ்

பாஜக நியமன எம்எல்ஏக்கள் மூவருக்கும் புதுச்சேரி சட்டப்பேரவையில் நுழைய அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆளுநர் கிரண்பேடி பேரவையில் உரையாற்ற எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

புதுச்சேரியின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) காலை தொடங்குகிறது. 

3 பாஜக எம்.எல்.ஏக்கள்  நியமனம் செல்லும் என உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து பாஜக நியமன எம்.எல்.ஏக்கள்  சட்டப்பேரவைக்குள்  நுழைவோம்  என பாஜக எம்.எல்.ஏக்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

அதேநேரத்தில்  உயர் நீதிமன்ற தீர்ப்பு முழுவதையும் நான் படித்து பார்த்துவிட்டு, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து முடிவு செய்வேன். அதுவரை நான் முன்பு பிறப்பித்த உத்தரவு செல்லும்( அங்கீகரிக்க மறுப்பு) என கூறியுள்ளார். இதனால் பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சட்டப்பேரவையில்  வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை வாயிலின் நுழைவு வாயில் கேட் காலையில் பூட்டப்பட்டது. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள் கார் சட்டப்பேரவைக்குள்  அனுமதிக்கப்படவில்லை. அனைவரும் வெளியே காரை நிறுத்திவிட்டு உள்ளே வந்தனர். வேறு யாருடைய காரிலும் நியமன எம். எல்.ஏக்கள் உள்ளே நுழைந்துவிடக்கூடாது என சட்டப்பேரவை காவலர்கள் விழிப்புடன் இருக்க சபாநாயகர் வைத்திலிங்கம் உத்தரவிட்டுள்ளார்.

சட்டப்பேரவை வளாகம் சுற்றிலும் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.. அதே போல் சட்டப்பேரவையில் உள்ளே மொத்தமாக 33 இருக்கைகள் போட்டிருக்கும். ஆனால் இன்று எதிர்கட்சி வரிசையில் உள்ள இரண்டு இருக்கைகளும், ஆளும்  கட்சி வரிசையில் ஒரு இருக்கையும்  என மூன்று இருக்கைகள் அகற்றப்பட்டது.

தற்போது எதிர்க்கட்சி வரிசையில் 12 இருக்கைகளும், ஆளும் கட்சி வரிசையில் 15 இருக்கைகளும் உள்ளன. இது தவிர சபாநாயகர், துணை சபாநாயருக்கு தனி இருக்கைகள் போடப்பட்டுள்ளது. காலை உள்ளே வந்த   3 நியமன எம்.எல்.ஏக்களையும் சபை காவலர்கள்  உள்ளே அனுமதிக்கவில்லை.

அப்போது அவர்களை தடுத்து நிறுத்தியதால், எஸ்பி வெங்கடசாமியிடம் 3 பேரும் கடும் வாக்குவாதம் செய்தனர்.. தொடர்ந்து நுழைவு வாயிலில் இருந்த சபை காவலர்களிடம் நீதிமன்ற உத்தரவை காட்டி உள்ளே விடுமாறு கூறியும் அவர்கள் அனுமதிக்கவில்லை. சபாநாயகர்  அனுமதிக்குமாறு கூறவில்லை உங்களை அனுமதிக்க முடியாது என்று கூறினர்.

சட்டப்பேரவைக்குள் அனுமதிக்க முடியாது என்பதை எழுத்துப்பூர்வமாக கொடுங்கள். சட்டத்தை மதித்து நடங்க ள் இல்லையெனில் உங்கள் வேலை போய்விடும். சபாநாயகர் வாய் மொழியாக உத்தரவிட்டதை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று 3 நியமன எம்எல்ஏக்களும் வலியுறுத்தினர்.

அதையடுத்து அங்கு வந்த. டிஐஜி ராஜீவ்ரஞ்சனிடம் உள்ளே அனுமதிக்குமாறு 3 பேரும் வலியுறுத்தினர். என்னுடைய அதிகாரம் சாலை  வரை மட்டுமே, அதற்கு மேல் உள்ளே நுழைவதற்கு சபாநாயகர் அனுமதி தர வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து தங்களை. தடுத்து நிறுத்திய சபை காவலர்களின் பெயர்களையும் பாஜகமாநில தலைவர்  சாமிநாதன் குறிப்பெடுத்தார்.

 அப்போது எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வந்தனர். அவர்கள்  உள்ளே வரும் போது சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் உள்ளே நுழைய முயன்றபோது தள்ளு, முள்ளு ஏற்பட்டது.  அப்போது,   எம்.எல்.ஏக்களை உள்ளே விடுமாறு ரங்கசாமி கூறினார்.

இதையடுத்து அங்கிருந்த எல்லோரையும் உள்ளே விட சொல்கிறாரா? என சபை காவலர்களுக்கு புரியவில்லை. பின்னர் எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி, என். ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.  தொடர்ந்து நியமன எம்.எல்.ஏக்கள் சட்டசபை வாயிலை முற்றுகையிட்டனர். இந்நிலையில் ஆளுநர் கிரண்பேடி சட்டப்பேரவையில் உரையாற்ற வந்தார். இதையடுத்து தங்களிடம் பேசுவார் என்று நியமன எம்எல்ஏக்கள் வாயிலில் காத்திருந்தனர்.

ஆனால், துணைநிலை ஆளுநர் கிரண்பேட காரானது,,  அவுட் கேட் வழியாக உள்ளே வந்தது.. அதை பார்த்த  3 நியமன எம்.எல்.ஏக்களும் அவுட் கேட் நோக்கி ஓடினர். அதற்குள் பேரவைக்குள் ஆளுநர் வந்ததால் கதவு மூடப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்