நாள் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் மட்டுமே வசூல்:வரவேற்பு இல்லாத ‘இல்லம் தேடிவரும் ஆவின்’

By க.சக்திவேல்

ஆவின் பொருட்களை வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே சென்று விநியோகிக்க அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் போதிய வரவேற்பை பெறவில்லை.

‘இல்லம் தேடி வரும் ஆவின்’ என்ற திட்டத்தை கடந்த ஆண்டு மே மாதம் பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடங்கிவைத்தார். சென்னை கோயம்பேடு தெற்காசிய விளையாட்டு கிராம குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஆவின் நவீன பாலகத்தில் தொடங்கப்பட்ட இத்திட்டம் படிப்படியாக மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது சென்னையில் உள்ள 18 நவீன ஆவின் பாலகங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்படி, ஆவின் பொருட்களான வெண்ணெய், நெய், பால் பவுடர், பாதாம் மிக்ஸ் பால் புவுடர், மோர், தயிர், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை செல்போன், இணையதளம் மூலம் ஆர்டர் செய்யலாம். ஆர்டர் செய்யப்படும் பொருளை பிரத்யேக மாக இருசக்கர வாகனம் மூலம் வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்து வருகின்றனர். குறைந்தபட்சம் ரூ.300-க்கு ஆர்டர் செய்ய வேண்டும். பார்லரை சுற்றி அரை கி.மீ. சுற்றளவுள்ள இடங்களுக்கு பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. இதற்கென கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை.

இத்திட்டத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என ஆவின் நிறுவனம் எதிர்பார்த்தது. ஆனால், ஒரு சில இடங்களில் மட்டுமே இது வரவேற்பைப் பெற்றுள்ளது. பல இடங்களில் எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கவில்லை.

இதுகுறித்து ஆவின் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பீட்சா, பர்கர், பிரியாணி போன்ற உணவுப் பொருட்களை போல ஆவின் பொருட்களையும் வீடுகளுக்கு சென்று விநியோகிப்பதை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்த்தோம்.. ஆனால், குடும்பத்தோடு ஆவின் பார்லர்களுக்கு நேரடியாக வந்து, தங்களுக்கு பிடித்தமான ஐஸ்கிரீம், லஸ்ஸி, குல்பி போன்றவற்றை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதையே மக்கள் விரும்புகின்றனர்.

‘இல்லம் தேடி வரும் ஆவின்’ திட்டம் மொத்தம் 18 இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் விருகம்பாக்கம், அண்ணா நகர், கோயம்பேடு, பெசன்ட் நகர் ஆகிய 4 இடங்களில் மட்டுமே மக்களிடம் இதற்கு வரவேற்பு உள்ளது. மற்ற இடங்களில் நாங்கள் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை.

ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வரை ஆர்டர் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், ரூ.10 ஆயிரம் வரை மட்டுமே ஆர்டர் கள் கிடைக்கின்றன. வரவேற்பு குறைவு என்பதற்காக இந்த சேவையை நாங்கள் நிறுத்தப் போவதில்லை. தேவைப்படுவோர் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆவின் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க, ஆன்லைன் உணவு விநியோக நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகி றோம்.

சென்னையில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு தேவையான ஆவின் பொருட்களை மொத்தமாக ஆர்டர் செய்தால் அவர்கள் குறிப்பிடும் இடத்துக்கு கொண்டு சென்று விநியோகிக்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம். இதற்கு கூடுதல் கட்டணம் ஏதும் இல்லை. குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை ஆர்டர் செய்ய வேண்டும். தேவைப்படும் தேதிக்கு 3 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்ய வேண்டும்.

மொத்தமாக ரூ.10 ஆயிரத்துக்கு மேல் ஆர்டர் செய்தால் தள்ளுபடி உண்டு. ஆர்டர் செய்ய விரும்புவோர் 1800 425 3300 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள லாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்